திமுக விஐபிக்கு கடும்போட்டி... அதிமுக போட்ட அதிரடி திட்டம்..!

Published : Mar 11, 2021, 05:53 PM IST
திமுக விஐபிக்கு கடும்போட்டி... அதிமுக போட்ட அதிரடி திட்டம்..!

சுருக்கம்

அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அக்கட்சிக்கு ஒரு தொகுதியை அதிமுக ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, திருச்சுழி தொகுதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சுழியில் திமுகவை சேந்த தங்கம் தென்னரசு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவர் முக்குலத்தோர் சமூகத்தில் மறவர் வகுப்பை சார்ந்தவர். ஆனால், திருச்சுழி தொகுதியில் முக்குலத்தோரில் அகமுடையார் வகுப்பினர் அதிகம் வசித்து வருகின்றனர். அகமுடையார் இனத்தை சேர்ந்த சேதுராமனுக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கி உள்ளது கடும் போட்டியை உருவாக்கி உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!