அமமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.. அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் டிடிவி.தினகரன்..!

Published : Mar 11, 2021, 05:47 PM IST
அமமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.. அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் டிடிவி.தினகரன்..!

சுருக்கம்

அமமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார். 

அமமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.  இந்நிலையில், அமமுக முதற்கட்டமாக 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருந்து. இதனையடுத்து, 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கோவில்பட்டி தொகுதியில்  அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிட உள்ளார். அதேபோல், அதிமுக இருந்து அமமுகவில் இணைந்த ராஜவர்மனுக்கு சாத்தூர் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!