சேப்பாக்கம் சீட் மட்டுமில்ல... இதுவும் போச்சா?... உச்சகட்ட அதிருப்தியில் குஷ்பு போட்ட ட்வீட்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 11, 2021, 05:42 PM IST
சேப்பாக்கம் சீட் மட்டுமில்ல... இதுவும் போச்சா?... உச்சகட்ட அதிருப்தியில் குஷ்பு போட்ட ட்வீட்...!

சுருக்கம்

தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார் குஷ்பு. 

திமுகவில் இருக்கும் போதிலிருந்தே கட்சியில் எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டுமென பெரு முயற்சி செய்தார். அது ஒர்க் அவுட் ஆகாததால் அங்கிருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்ற குஷ்புவிற்கு அங்கும் பெரிதாக எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் வர உள்ள சட்டமன்ற தேர்தலிலாவது எம்.எல்.ஏ.சீட் வாங்கிவிட வேண்டுமென பாஜகவிற்கு மாறினார். 

பாஜகவில் இணைந்த முதல் நாளில் இருந்தே போராட்டம், பொதுக்கூட்டம் என ஊர், ஊராக சுற்றி கட்சிக்கு பணியாற்றி வந்தார். அதனால் இந்த தேர்தலில் கண்டிப்பாக குஷ்புவுக்கு சீட் கிடைக்கும் என்றும், மயிலாப்பூர் அல்லது சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தீவிரமாக பணியாற்றி வந்தார். பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி வேட்பாளர் குஷ்பு என்று இருந்தால் கிட்டதட்ட அனைத்துமே ஓ.கே. என செம்ம குஷியில் இருந்தார். 

தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார் குஷ்பு. ஆனால் அவருடைய கனவில் மண்ணைப் போடும் விதமாக அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. தொகுதி பட்டியல் வெளியான அன்று கூட சேப்பாக்கம் தொகுதியில் வீடு, வீடாக சென்று வாக்குசேகரித்துக் கொண்டிருந்தார் குஷ்பு என்பது தான் பரிதாபத்தின் உச்சம். 

ஏற்கனவே சீட் கிடைக்கவில்லை என்ற கடுப்பில் இருக்கும் குஷ்புவிற்கு அவருடைய ட்விட்டர் புளூ டிக்கும் பறிக்கப்பட்டுள்ளது. பிரபலங்களின் அடையாளத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக ட்விட்டர் நிறுவனம் அவர்களுடைய கணக்கிற்கான உண்மையான அங்கீகாரமாக புளூ டிக்கை கொடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதமும் நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த புளூ டிக் மாயமாகி திரும்ப கிடைத்தது. 

தற்போது  மீண்டும் தன்னுடைய புளூ டிக் காணாமல் போனதால் குஷ்பு உச்சகட்ட அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘சரிபார்க்கப்பட்டது என்ற புளூ டிக் மீண்டும் போய்விட்டது. கடந்த முறை உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது புளூ டிக்கை மீட்டுக்கொடுத்தீர்கள். தற்போது அதேபோல் மீண்டும் சரி செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகோள் வைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!