
நாளை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் எப்படி நடக்கும் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி உள்ளன. இதுபற்றி சட்டமன்றத்தில் நீண்ட அனுபவம் பெற்ற முன்னாள் எம்எல்ஏ ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது.
சட்டசபையில் உரிமை கோருவது குறித்து இப்போது இருக்கும் சூழ்நிலையில் கவர்னர் மாளிகை, ஒரு வழிகாட்டுதலை அளிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் சபையின் தலைவர், சபா நாயகரே இதுபற்றி தீர்மானிப்பார்.
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரும்போது, சிலர் சூழ்ச்சம வேலைகள் செய்து, நம்பிக்கை வாக்கெடுப்பை திசை திருப்பலாம். இன்று இருக்கும் சூழ்நிலையில், எம்எல்ஏக்கள் அடைத்து வைத்து இருப்பதாகவும், அவர்கள் மிரட்டப்பட்டு இருப்பதாகவும், ஓ.பி.எஸ். தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மறுபுறம், நாங்கள் சுதந்திரமாக இருப்பதாக, ஓரிரு எம்எல்ஏக்கள், கூவத்தூரில் பேட்டி அளித்தனர். ஆனால், பெரும்பாலான எம்எல்ஏக்கள் நிலை, எந்த மனநிலையில் உள்ளனர் என்பது பற்றி, தெளிவான பதில் இல்லை. நம்பிக்கையுடன் இருக்கிறோம். யாரும் அடைத்து வைக்கவில்லை என்று கூறும் எம்எல்ஏக்கள், முதலமைச்சராக எடப்பாடி பதவியேற்ற பின்னரும், கூவத்தூரில் ஏன் அடைத்து வைக்க வேண்டும்.
நேற்று, ராஜ்பவனில் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்த்தன் காரணம் என்ன? பதவியேற்புக்கு பின்னர், அனைவரும் மீண்டும் அதே ரிசார்ட்டில் தங்க வைக்கப்ப்ட்டதன் மர்ம்ம் என்ன?
மாமனார் இறப்புக்கு செல்ல முடியாத தூசி மோகன் எம்எல்ஏ, தயார் மறைவுக்கு செல்ல முடியாத விஜயகுமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் கூவத்தூரிலேயே இருப்பது ஏன். விருப்பத்தின்பேரில்தான் தாயார் மறைவுக்கு கூட செல்லாமல், இருந்தாரா..? என பல கேள்விகள் எழுந்தள்ளது.
எனவே, நாளை நடக்கும் வாக்கெடுப்பில் கவர்னர் வழிகாட்டுதலை அளிக்க வேண்டும். வாக்கெடுப்பின்போது, உச்சநீதிமன்ற நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். வாக்கு சீட்டு முறையில் ரகசிய வாக்கெடுப்ப்பு நடத்த வேண்டும். அல்லது பாராளுமன்றத்தில் வாஜ்பாய் – காங்கிரஸ் அரசு நடத்தியதுபோல் பட்டன் முறை வைக்கப்பட வேண்டும்.
இதன்மூலம் எம்எல்ஏக்கள், தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க முடியும். அவ்வாறு வாக்களிக்கும்போது, எம்எல்ஏக்களுக்கு தொகுதி மக்களின் விருப்பம், அதிமுக தொண்டர்களின் மனநிலை போன்ற அழுத்தங்கள் அவர்கள் மனசாட்சியை தட்டி எழுப்பி, சுதந்திரமாக வாக்களிக்க வகை செய்யும்.
ஆனால், ஏற்கனவே சொன்னதுபோல், சில சூழ்ச்சமங்களை செய்வதன் மூலம் வாக்களிப்பை சாதகமாக மாற்ற முயல்லாம். கையை உயர்த்தி, ஆதரவை தெரிவியுங்கள் என் தேர்வு முறைறை நடத்த வாய்ப்பு உண்டு. அவ்வாறு நடந்தால், தாங்கள் யாருக்கு வாக்களிக்க்கிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிப்பதன் மூலம், எம்எல்ஏக்களின் உரிமைகள் பறிக்கப்படலாம்.
ஆகவே, சபாநாயகர் நடுநிலையானவர் என்ற வகையில், முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன்மூலம்,தனது பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்தால், அதை வரவேற்போம்.
இவ்வாறு மூத்த எம்எல்ஏ தெரிவித்தார்.