டோல்கேட்டை அகற்ற வேண்டும்... பெட்ரோல்- டீசல் விலையை குறைக்காவிட்டால்... 9ம் தேதி வரை கெடு..!

By Thiraviaraj RMFirst Published Jul 21, 2021, 4:31 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம், லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. 
 
டீசல், பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால், பல அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. ஏழை எளிய மக்கள் இதனால் திண்டாடி வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்கள் தேக்கமடையத் தொடங்கியுள்ளன. பெட்ரோல் டீசல் விலையால் லாரிகளின் போக்குவரத்து குறைந்து வருகின்றன. அத்தோடு சுங்கக்கட்டண வசூலும் அதிகமாகி உள்ளது. இவை எல்லாம் சேர்ந்து பொதுமக்களை மட்டுமல்லாது, லாரி உரிமையாளர்களையும் பாதித்து வருகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்படும்” என தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

click me!