சொந்த அமைச்சர்கள் மீதே மோடிக்கு நம்பிக்கை இல்லை.. பிரதமரை போட்டுதாக்கும் மம்தா.

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2021, 4:08 PM IST
Highlights

இதை மத்திய அரசு மறுத்தாலும், ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 10 நாடுகளில் இத்தகைய உளவு செயலியை அரசாங்கங்கள் பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த அரசு பெகாசஸ்  ஸ்பேவேர்க்கு பணத்தை செலவழிக்கிறதே தவிர, மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், நீதிபதிகளின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டுள்ளது மிக மோசமான செயல் எனவும் அவர் கண்டித்துள்ளார். பெகாசஸ் என்ற உளவு செயலியின் மூலம் , இந்தியாவில் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் என பல தரப்பினரின் தொலைபேசி எண்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதை மத்திய அரசு மறுத்தாலும், ஆதாரபூர்வமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 10 நாடுகளில் இத்தகைய உளவு செயலியை அரசாங்கங்கள் பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று என்ற செய்தி நாட்டு மக்களை நிலைகுலைய செய்துள்ளது. தற்போது பருவமழை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பி வருகின்றன. ஜூலை 28 அன்று தகவல் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் இது விவாதிக்கப்பட உள்ளது. ஆனாலும் இந்த பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,

மோடி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மற்றும் நீதிபதிகளின் தொலைபேசிகள் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டிருப்பது மிக மோசமான செயல், இந்த அரசாங்கம் உளவு செயலிக்கு பணத்தை செலவழிக்கிறது ஆனால் மக்களுக்காக அல்ல, இவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதுதான் நமது அயராத முயற்சி எனவும், கொரோனா காலத்தில் யோகி அரசு மிக சிறப்பாக வேலை செய்தது என வாரணாசியில் பிரதமர் மோடி யோகியை  பாராட்டினார், ஆனால் உ.பியில் ஆறுகளில் இறந்த சடலங்கள் பாய்கின்றன. இதற்கு யோகியும் ,பிரதமரும் வெட்கப்பட வேண்டும். இந்த அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. ஏன்? தனது சொந்த அமைச்சர்கள் மீது கூட மோடிக்கு நம்பிக்கை இல்லை. என அவர் விமர்சித்தார். 
 

click me!