மக்களே உஷார்.. போலீ கோழி முட்டைகளால் பரபரப்பு.. பார்த்து வாங்குங்க.

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2021, 3:30 PM IST
Highlights

சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் கொண்டு வந்திருந்த முட்டைகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. அப்போது பொதுமக்கள் வாங்கும்போதே சில முட்டைகள் கீழே விழுந்த போது அவைகள் உடையவில்லை, 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பொது மக்கள் போலி கோழி முட்டைகளை வாங்கி ஏமார்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வியாபாரி ஒருவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் வரிகுண்டபாத்  ஆண்ட்ராவரிபள்ளியில் கூவிக் கூவி  முட்டைகளை விற்பனை செய்து வந்தார்.  ஒரு மினி வேன் நிறைய அவர் முட்டைகளைக் கொண்டு வந்திருந்தார். அப்போது அந்த வியாபாரி 30 முட்டைகள் 130 ரூபாய் க்கு வழங்கப்படும் என கூறினார். இதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த அப்பகுதி மக்கள் முட்டை இவ்வளவு விலை குறைவாக கிடைக்கிறதே என எண்ணி அதிக அளவில் முட்டைகளை வாங்கினர். 

சுமார் ஒரு மணி நேரத்தில் அவர் கொண்டு வந்திருந்த முட்டைகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. அப்போது பொதுமக்கள் வாங்கும்போதே சில முட்டைகள் கீழே விழுந்த போது அவைகள் உடையவில்லை, இதில் சந்தேகம் அடைந்த சிலர் கீழே விழுந்த பின்னும் முட்டை உடையவில்லையே என சந்தேகம் எழுப்பினர். ஆனால் அதற்கு அந்த வியாபாரி, தன்னுடைய முட்டைகள் அந்த அளவுக்கு உறுதியானவை, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம், முட்டையின் தரத்தில் எந்த குறையும் இல்லை எனக் கூறி மழுப்பினார். அதை நம்பிய மக்கள் முட்டைகளை தாராளமாக வாங்கினர். பின்னர் அந்த நபர் அங்கிருந்து கிளம்பி விட்டார். அதிக அளவில் முட்டைகளை வாங்கிய மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று முட்டையை வேக வைக்கவும், ஆம்லேட் போடவும் முயற்சித்தனர்.  முட்டைகளை உடைக்க முயற்சித்தபோது அவை உடையவில்லை.

பின்னர் அதைக் கீழே எரிந்தபோது முட்டை உடையாமல் ஒரு பிளாஸ்டிக் பந்து போல உருண்டு ஓடியது. அதேபோல் பலர் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வேகவைத்தும் முட்டைகள் கல் போல இருந்தது, வேகவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் முட்டைகளை வீதிகளின் வீசினர். பின்னர் அவைகள் அனைத்தும் ஒரு பிளாஸ்டிக் முட்டைகள் போல இருந்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் தாங்கள் மோசடி செய்யப்பட்டது குறித்து புகார் கொடுத்தனர். கோழி முட்டைகள் என கூறி போலீ முட்டைகளை விற்பனை செய்ய வியாபாரியை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். பிளாஸ்டிக் முட்டை விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

click me!