திமுக அரசை தேவையில்லாமல் விமர்சிப்பது வெற்று அரசியல்.. நடிகர் எஸ்.வி.சேகர் சரவெடி..!

Published : Jul 21, 2021, 03:26 PM IST
திமுக அரசை தேவையில்லாமல் விமர்சிப்பது வெற்று அரசியல்.. நடிகர் எஸ்.வி.சேகர் சரவெடி..!

சுருக்கம்

இதுபோன்று சமயத்தில் மக்களை காப்பாற்றுவதில் மட்டும் தான் முழு கவனத்தை செலுத்த முடியும். எல்லா துறைகளிலும் 100% கவனத்தை செலுத்த முடியாது. ஒரு சமயத்தில், ஒரு வேலை மட்டும் தான் பார்க்க முடியும். அது யாராக இருந்தாலும் சரி. அதையும் காலையில் எழுந்தவுடனேயே விமர்சித்து கொண்டியிருந்தால் வெற்று அரசியலாக தான் இருக்கும் என கூறியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது என நடிகர் எஸ்.வி.சேகர் புகழாரம் சூட்டியுள்ளார். 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது சிலைக்கு எஸ்.வி. சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது.

இதுபோன்று சமயத்தில் மக்களை காப்பாற்றுவதில் மட்டும் தான் முழு கவனத்தை செலுத்த முடியும். எல்லா துறைகளிலும் 100% கவனத்தை செலுத்த முடியாது. ஒரு சமயத்தில், ஒரு வேலை மட்டும் தான் பார்க்க முடியும். அது யாராக இருந்தாலும் சரி. அதையும் காலையில் எழுந்தவுடனேயே விமர்சித்து கொண்டியிருந்தால் வெற்று அரசியலாக தான் இருக்கும் என கூறியுள்ளார். ஒரு உன்னத நோக்கத்துடன் செயல்படும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசை எப்படி விமர்சனம் செய்ய முடியும். 

திமுக அரசை தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல். எந்த விமர்சனத்தையும் 100 நாட்கள் வரை வைக்க வேண்டாம் என்று எஸ்.வி. சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி