தடுப்பூசி போட்டால்தான் 100 நாள் வேலை.. கட்டுப்பாட்டால் கதி கலங்கி நிற்கும் கிராமபுற மக்கள்.

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2021, 1:52 PM IST
Highlights

அதுமட்டுமின்றி  கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கத்திற்கு பின்னர் தடுப்பூசி செலுத்துக்கொள்ள மக்கள்  அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதற்கிடையில் மூன்றாவது அலை வருவதற்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. 

வறுமை ஒழிப்பு திட்டங்களில் ஒன்றான 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வேலை இல்லை என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது, இது 100 நாள் வேலைத்திட்டத்தை நம்பியிருக்கும் ஏழை எளிய மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், அதே நேரத்தில் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

நாடு முழுதும் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலை ஒட்டுமொத்த நாட்டையும் மிகக் கடுமையாக  தாக்கியது. அதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரசை தடுக்க கோவேக்சின், கோவிஷீல்டு என  2 தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தடுப்பூசியால் மட்டுமே இந்த தொற்றில் இருந்து மீள முடியும் என்பதால், தடுப்பூசி திட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கு  தடுப்பு செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கும் தடுப்பூசி பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதுமட்டுமின்றி  கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கத்திற்கு பின்னர் தடுப்பூசி செலுத்துக்கொள்ள மக்கள்  அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதற்கிடையில் மூன்றாவது அலை வருவதற்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தடுப்பூசி கிடைக்காததால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் நோய்த்தொற்று தாக்கம் அதிகளவில் உள்ளதால், அதை கட்டுப்படுத்த முயற்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, மேலும் அங்கு கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் அதிகம் உள்ளதால் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்ற வருகிறவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் காட்டினால் தான் வேலை வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவித்தது. 

இதனால் நூறு நாள் வேலைத் திட்டத்தின்கீழ் பணி செய்து வருவோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  எப்படியேனும் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் தடுப்புசி பற்றாக்குறை நிலவி வருவதால் தங்களால் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியவில்லை, 100 நாள் வேலைக்கும் போக முடியவில்லை என்ற கவலையில் கிராமப்புற மக்கள் ஆழ்ந்துள்ளனர். 
 

click me!