ஆணுறுப்பை அறுப்பதாக சவால் விட்ட வீரலட்சுமி... தனது முயற்சி வெற்றியடைந்ததாக பெருமிதம்..!

Published : Jul 21, 2021, 01:39 PM IST
ஆணுறுப்பை அறுப்பதாக சவால் விட்ட வீரலட்சுமி... தனது முயற்சி வெற்றியடைந்ததாக பெருமிதம்..!

சுருக்கம்

தனக்கு சமூக வலைதளம் வாயிலாக, பாலியல் தொல்லை கொடுத்த நபர்களின் ஆணுறுப்பை அறுத்து விடுவதாக கூறியிர்ந்த வீரலட்சி தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். 

தனக்கு சமூக வலைதளம் வாயிலாக, பாலியல் தொல்லை கொடுத்த நபர்களின் ஆணுறுப்பை அறுத்து விடுவதாக கூறியிர்ந்த வீரலட்சி தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். 

சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் வீரலட்சுமி; தமிழர் முன்னேற்றப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவருக்கு, மர்ம நபர்கள், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக, ஆபாச வீடியோக்கள் அனுப்புவது, 'வீடியோ காலில்' நிர்வாணமாக பேசுவது என, பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக கூறப்படுகிறது.இது குறித்து, போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.அதனால், சில தினங்களுக்கு முன், வீரலட்சுமி அரிவாளுடன், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருபவர்களின் பெயரை சொல்லி, அவர்களின், 'அதை' அறுத்து விடுகிறேன். அப்போதாவது நடவடிக்கை எடுப்பீர்களா என, கேள்வி எழுப்பி, 'வீடியோ' வெளியிட்டார். அது, சர்ச்சையை கிளப்பியது.

இதனையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வீரலட்சுமி நேற்று முன் தினம் மீண்டும் அளித்தார். சட்டசபை தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட, மார்ச், 21ல் வேட்பு மனு தாக்கல் செய்தேன். அன்றே மர்ம நபர்கள், என் மொபைல் போன் எண்ணிற்கு, ஆபாச வீடியோக்களை அனுப்பினர். அதுபற்றி, பரங்கிமலை துணை கமிஷனரிடம் புகார் அளித்தேன்; நடவடிக்கை இல்லை. பின், செந்தமிழினி வீரலட்சுமி என்ற என், 'பேஸ்புக்' பக்கத்தில், 'மெசஞ்சர்' வாயிலாக, 40க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை அனுப்பினர். அதுபற்றி, ஜூன், 18ல், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்.

ஜூலை, 15ல், முனி என்பவரின் 'பேஸ்புக்' பக்கத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் படத்துடன், வீடியோ கால் அழைப்பு வந்தது. அதை ஏற்காமல் பல முறை தவிர்த்தேன். மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்ததால், 'டார்ச்சர்' தாங்க முடியாமல், அழைப்பை ஏற்றேன். எதிர்முனையில் பேசியவர், நிர்வாண நிலையில் இருந்தார். நேற்று முனி என்பவர், 'பேஸ்புக்'கில் என்னை விபசாரி என, குறிப்பிட்டு பதிவு வெளியிட்டுள்ளார்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.பின், வீரலட்சுமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அரிவாளுடன் வீடியோ வெளியிட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ''அரிவாளை காட்டியது சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிபாடு தான் அது. நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டேன். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்களது ஆணுறுப்பை அறுத்து விடுவேன் எனத் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், இன்று அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றிபெற்றுள்ளேன். எனக்கு ஆபாச வீடியோ, போட்டோக்களை அனுப்பியவர்களை சங்கர் நகர் போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையினருக்கு நன்றி’’எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Vijay Set Hit Back: 5 வருடம் 5 முதலமைச்சர்.! சீமான் உள்ளிட்டோரை ஸ்கெட்ச் போட்டு தூக்க திட்டம் ரெடி.! அடித்து ஆட தொடங்கும் விஜய்.!
நம்பிக்கையில்லா தீர்மானம்... சபாநாயக ஓம் பிர்லா எடுத்த மிக முக்கிய முடிவு