அமைச்சர் துரைமுருகனை அடுத்து கமிஷனர் மீதும் பி.சி.ஆர் வழக்கு... இது எங்கே போய் முடியுமோ..?

By Thiraviaraj RMFirst Published Jul 21, 2021, 3:35 PM IST
Highlights

மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் புகார் தெரிவித்துள்ளார். 

மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் புகார் தெரிவித்துள்ளார். 

ஜீலை 12 ஆம் தேதி மதுரை மாநகராட்சிக்கு ஆய்வுக்கு சென்றபோது தன்னை அவமானப்படுத்தும் நோக்கில் நடந்து கொண்டதாக புகாரில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக சாதரண மக்களை பழிவாங்கும் நோக்கில் பி.சி.ஆர் எனப்படும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் அந்த சட்டம் தற்போது ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  

சமீபத்தில் சென்னை ஐஐடியில் சாதிபாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, சென்னை ஐஐடியில் சாதிப் பாகுபாடு இல்லை என தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்திடம் ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. இந்த விளக்கத்தை ஏற்பதாக ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹெல்டர் தெரிவித்தார். 

அடுத்து, காட்பாடி அருகே நிலப் பிரச்சினையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட 3 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட புகாரின் மீது விளக்கம்அளிக்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த பி.சுப்பிரமணி என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், அவரது உறவினர்கள் முருகன், கிருஷ்ணன் ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.

அதில், ‘‘எனது நிலத்தை பக்கத்து நிலத்தின் உரிமையாளர்களான முருகன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் அபகரிக்க முயல்கின்றனர். இவர்கள் மீது திருவலம் காவல் நிலையத்தில் கடந்த மே 28-ம் தேதி அளித்த புகாரின்பேரில் சமுதாய சேவை பதிவேடு (சிஎஸ்ஆர்) நகல்மட்டும் வழங்கப்பட்டது. 29-ம் தேதிஅளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பாக கடந்த மாதம்26-ம் தேதி முதல்வர், தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் அளித்த புகாரை திரும்பப் பெற அழுத்தம் கொடுக்கின்றனர். அமைச்சர் துரைமுருகனின் உறவினர்கள் என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர்.

எனவே, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதுடன் திமுகபொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் முருகன், கிருஷ்ணன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சுப்பிரமணி அளித்துள்ள புகார் மனுவின் மீது வரும்ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது வேலூர் மாவட்டஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘சுப்பிரமணி கூறிய புகாரின்படி அமைச்சர் துரைமுருகன் மற்றும் முருகன், கிருஷ்ணன் ஆகியோர் உறவினர்கள் இல்லை. கடந்த மே மாதம் 25-ம் தேதி சுப்பிரமணி அளித்த புகார் மனுவிலும் துரைமுருகன் பெயர் இல்லை. அவர் அளித்த புகார் மனுவின் மீது சிஎஸ்ஆர் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, அமைச்சரின் பெயரைவேண்டும் என்றே சேர்த்து புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரைஎங்கள் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 6-ம் தேதி விளக்கம் அளிக்கப்படும்” என தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீது தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் புகார் தெரிவித்துள்ளார்.

தனக்கு மேல் நிலையில் உள்ள அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ நடவடிக்கை எடுத்தால் அவர்களை பழிவாங்கவும் இந்த பி.சி.ஆர் சட்டத்தை கையெடுத்துள்ளார்கள். இப்படியே போனால், போனால் இந்த பி.சி.ஆர் வழக்கை வைத்து இன்னும் யார் யாருக்கு என்னென்ன நிலை ஏற்படுமோ என்கிற பதற்றம் ஏற்படும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.  
 

click me!