இயற்கை காய்கறி விற்பனையில் இடைத்தரகர்களின் ஆட்டத்துக்கு ஆப்பு: அதிரடியில் இறங்குதா அரசு?

 
Published : Nov 07, 2017, 10:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
இயற்கை காய்கறி விற்பனையில் இடைத்தரகர்களின் ஆட்டத்துக்கு ஆப்பு: அதிரடியில் இறங்குதா அரசு?

சுருக்கம்

Today the natural food products sales are becoming one of the most challenging jobs.

இன்று சக்கைபோடு போடும் தொழில்களில் ஒன்றாகி போயுள்ளது ‘இயற்கை உணவு பொருட்கள்’ விற்பனை. ஆனால் இவற்றின் விலையானது நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கங்கள் ரெகுலராக வாங்க முடியாத அளவில் உச்சத்தில் இருப்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது.

இதை கட்டுப்படுத்த கூடிய விரையில் அரசாங்கமே இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களுக்கான விலை நிர்ணய கமிட்டி ஒன்றை உருவாக்குமென கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்து விழுகின்றன.

இதுபற்றி பேசும் அதிகாரிகள் “வேதியல் உரம் மற்றும் பூச்சி மருந்து பயன்பாட்டால் மண்ணும், அதில் விளையும் உணவுப்பொருட்களும் விஷமாகி இருக்கின்றன. இதை உண்ணும் மக்களுக்கு பல வகையான நோய்கள் வந்து சேர்கிறது.

எனவே ரசாயனமில்லாமல் இயற்கை வழியில் விவசாயத்தை செய்யுங்கள் என்று வல்லுநர்களும், ஊடகங்களும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே உள்ளன. இதனால் இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் மளமளவென பெருகி நிற்கிறது.

ஆனால் தங்கள் தோட்டத்தில் விளைந்தவற்றை மக்களிடம் நேரடியாக விற்பனை செய்ய அவர்களுக்கு வழியோ, வசதியோ இல்லை.

அதேபோல் இயற்கை வழியில் விளைந்த பொருட்களைத்தான் உண்ண வேண்டும் என்று கணிசமான மக்களும் முடிவெடுத்துள்ளனர். இதற்காக ஆர்கானிக் பொருட்களின் விலை அதிகமாக இருந்தாலும் கூட அதை வாங்க தயாராக இருக்கின்றனர். 

ஆக விவசாயிகள், மக்கள் இந்த இரண்டு பேரின் நிலையையும் புரிந்து கொண்டுள்ள இடைத்தரகர்கள் சிலர் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு இயற்கை பொருளை வாங்கி அதை மிக அதிக விலைக்கு மக்களிடம் விற்கின்றனர்.

இது பயனாளிகளுக்கு பெரும் பண சுமையை தருவதோடு, மீண்டும் கெமிக்கல் காய்கறிகள் பக்கம் திரும்பிட வைக்கிறது. 

இந்த விவகாரம் அரசின் கவனத்துக்கு வந்துள்ளதால் அதை தீர அலசி ஆராய்ந்திருக்கிறோம். இதனால் கூடிய விரைவில் இயற்கை வழியில் விளைந்த உணவுப்பொருட்களுக்கு  ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்யும் கமிட்டி ஒன்றை அமைக்கும் முடிவு எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

அதேபோல் இயற்கை காய்கறிகள், பழங்களுக்கென வழக்கம்போலிருக்கும் உழவர் சந்தையில் தனி இடமோ அல்லது தனி உழவர் சந்தையோ உருவாக்கப்படவும் வாய்ப்புள்ளது.” என்கின்றனர். 
செய்யுங்க பாஸ்! புண்ணியமா போவும்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!