
உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.
அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.
* மாநிலத்தின் கட்டமைப்பு பணிகள் வளர்ச்சிக்காக மொத்தத்தில் பனிரெண்டாயிரம் கோடி தந்தால் கூட்டணியில் நீடிப்போம். பட்ஜெட் தொடர் முடிவதற்குள் நிதியுதவியை அறிவியுங்கள் இல்லையென்றால் எங்கள் முடிவு மாறாது.
- சந்திரபாபு நாயுடு
* என் தொகுதியில் மக்கள் நலதிட்ட பணிகளுக்கான அழைப்பிதழில் தி.மு.க. எம்.எல்.ஏ.வான என் பெயரை போட வேண்டியிருப்பதால், அழைப்பிதழ் அடிப்பதையே நிறுத்திவிட்டார்கள். இதுதான் இந்த ஆட்சியின் லட்சணம்.
- கீதாஜீவன்.
* அத்தையின் (ஜெயலலிதா) வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். அது சிறப்பாக நிறைவடைந்ததும், சிறப்பாக வெளியிடப்படும்.
- தீபா
* தினகரனின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக பிரம்மாண்டமானதாக பேசப்படுகிறது.
- கஸ்தூரி
* நம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், பணம் வாங்கிக் கொண்டு அணியில் பதவி போட்டுக் கொடுத்துள்ளதாக வரும் தகவல்களை பார்த்தால் வெட்கக்கேடாக இருக்கிறது.
- ஸ்டாலின்
* மோடி பிரதமராக வராமல், வாஜ்பாய் பிரதமராக வந்திருந்தால், நாட்டில் ஒரு பிரச்னையும் வந்திருக்காது. மோடியால் நாடே கவலைப்பட்டு கிடக்கிறது.
- திருநாவுக்கரசர்
* எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியின் மேலெல்லாம் எனக்கு ஆசை இல்லை. என் தாய்க்கு, மகனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். என் தாய் சொன்னால் நான் அரசியலுக்கு வருவேன்.
- ராகவா லாரன்ஸ்
* இன்று இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையாக, உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனை.
- கடம்பூர் ராஜூ
* கடந்த ஓராண்டுக்கு முன்னர் துவங்கிய தர்ம யுத்தத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறியுள்ளது. அ.தி.மு.க. இயக்கமானது மக்கள் இயக்கமாகவே தொடர்கிறது. நாங்கள் ஒன்று கூடி, நிலையான அரசு தொடர்கிறது.
- பன்னீர் செல்வம்
* அடுத்த சட்டசபை தேர்தலில் முடிந்தால் ராயபுரம் தேர்தலில் போட்டியிட்டு, டிபாசிட் வாங்கட்டும் அமைச்சர் ஜெயக்குமார்.
- தினகரன்.