சாமான்யனுக்கு அட்வைஸ் அள்ளிவிடும் மோடியை நோக்கி ஒரு சவுக்கடி: தெறிக்கவிடும் ஸ்லைடு!

Asianet News Tamil  
Published : Feb 09, 2018, 05:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
சாமான்யனுக்கு அட்வைஸ் அள்ளிவிடும் மோடியை நோக்கி ஒரு சவுக்கடி: தெறிக்கவிடும் ஸ்லைடு!

சுருக்கம்

Advocate to Samanan a whip against Modi sprinkle slide

மீம்ஸ்கள், வாட்ஸ் அப்பில் உலா வரும் ஸ்லைடுகள் எல்லாமே ’வெட்டிப்பயலுகளின் வீணாக போன வேலை’ என்று தவிர்க்கப்பட வேண்டியவை அல்ல. அவற்றிலும் சமூக மாற்றத்தை கொண்டு வருவதற்கான தகவல்கள், விஷயங்கள் எவ்வளவோ புதைந்து கிடக்கின்றன.

அப்படிப்பட்ட ஒன்றை பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்!

வாட்ஸ் அப்பில் ஒரு ஆங்கில ஸ்லைடு ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.

”சிந்தியுங்கள், இந்த பதிவானது ’கியாஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள்’ என்று சாமான்யனுக்கு அறிவுரை சொல்லும் நம் பிரதமரை சென்றடையும் வரையில் வைரலாக்குங்கள்.” என்கிற கோரிக்கையுடன் உள்ளது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த ஸ்லைடில்?..அதாவது...

வெறும் 399/- ரூபாய்க்கு எல்லையில்லா மொபைல் அழைப்புகளை செய்து கொள்ளும் வாய்ப்பு இந்த தேசத்தில் கிடைக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு டெலிபோன் அலவன்ஸ் கொடுக்க வேண்டும்?

ராஜ்யசபாவில் 245 உறுப்பினர்கள், மக்களவையில் 545 உறுப்பினர்கள் என மொத்தம் எழுநூற்று தொண்ணூறு எம்.பி.க்களுக்கான டெலிபோன் அலவன்ஸ் தொகையை கணக்கிட்டால் ஒரு கோடியே பதினெட்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் ஆகிறது.

நம் வரிப்பணம் ஏன் இப்படி வீணாக வேண்டும்?! என்று கேட்கப்பட்டிருக்கிறது.
நெத்தியடிதானே!?....

 

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!