எடப்பாடி தும்மல் போட்டாலும் கூட அடுத்த நொடியே ‘துரோக தும்மல்’ன்னு அறிக்கை விடுறாரா தினகரன்!

By sathish kFirst Published Jan 15, 2019, 6:58 PM IST
Highlights

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை வரும் 18-ல் துவக்க இருக்கிறது தமிழக பா.ஜ.க. பிரதமர் தமிழகம் வரும் முன் கூட்டணியை வடிவமைத்து  முடிக்கும் மூவ்களில் உள்ளனர்: செய்தி. 
(அப்போ 18லிருந்து தமிழ் மீம்ஸ் மச்சான்களுக்கு செம்ம எண்டர்டெயின்மெண்ட் காத்திருக்குதுன்னு சொல்லுங்க. புள்ளைங்களா புகுந்து வெளாடுங்க மக்கா)

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி அமைக்கப்படும்: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 

(ஆஹா! என்ன ஒரு எக்ஸ்க்ளூசிவ் அறிவிப்பு இது! இத சொல்றதுக்காண்ணே சென்னையில இருந்து ஃபிளைட்டு பிடிச்சு மதர வந்து எறங்குனீக? ஒத்த வார்த்த சொன்னாலும் மத்தவய்ங்க வார்த்தையெல்லாம் பிச்சை எடுக்குற மாதிரி சொன்னீக பாருங்க!)

*     மாவட்ட நிர்வாகம் நடத்தும் ஆய்வு கூட்டங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை. ரகசியமாக கூட்டத்தை நடத்துவதன் மூலம் என்ன நன்மை கிடைத்துவிட போகிறது?: எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம். 

(சரி சரி அண்ணன் வேற ஏதோ எதிர்பார்க்குறா மாதிரி தெரியுது. ஆளும் தரப்புக்கு சிக்னல் கொடுக்குறா மாதிரியும் புரியுது)

*    மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்: தமிழிசை. 
(அது சரிக்கா! ஆனா அந்தக் கட்சிக்காரங்க ‘மக்கள் அதுக்கு தயாரா இல்லையே!’ன்னு சொல்லிக்கிட்டு வேற ரூட்டு போட்டாய்ங்கன்னு வெய்யுங்க, நீங்க இன்னா பண்ணுவீங்க)

*    கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ள ரெண்டு பேர்  முதல்வர் மீது குற்றம் சுமத்தும் போது அவர் ஏன் பயப்பட வேண்டும்?: டி.டி.வி. தினகரன். 

(ஏண்ணே, எடப்பாடியார் தும்மல் போட்டாலுங் கூட அடுத்த நொடியே ‘துரோக தும்மல்’ன்னு அறிக்கை விடுற நீங்க, இந்த விஷயத்துல மட்டும் சில மணி நேரம் கழிச்சு வாய தொறந்தது ஏன்? அதுக்குள்ளே எங்கேயெல்லாம் டிஸ்கஸ் பண்ணி டவுட்ஸை க்ளியர் பண்ணுனீங்க?ன்னு எதிர்கட்சிக்காரய்ங்க கேக்குறாய்ங்க.)

click me!