ஸ்டாலின் நடத்துறது ஊராட்சி சபை கூட்டமில்லை, வெறும் கிளைக்கழக கூட்டம்தாம்ணே! தளபதியை தாறுமாறக நக்கலடித்த அமைச்சர்.

By sathish kFirst Published Jan 15, 2019, 5:20 PM IST
Highlights

இப்படியொரு அமைச்சர் இருக்கிறாரா? எனும் அளவில்தான் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் அமைச்சர்களின் பெயர்கள் வெளியே தெரியும். ஆனால் எடப்பாடியார் அதிகாரத்தில், சகல சுதந்திரத்துடன் மாண்புமிகுக்கள் மனம் திறந்து பேசுகிறார்கள். அந்த வகையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜெல்லாம் தி.மு.க.வை கண்டமேனிக்கு விளாசுகிறார். 

சமீபத்தில் அவர் ஸ்டாலின் நடத்தி வரும் ஊராட்சி சபை கூட்டங்களைப் பற்றி விமர்சிக்கும்போது...”அந்த கட்சிக்கும்,மக்களுக்கும் இடையில பெரிய இடைவெளி விழுந்து போச்சுங்க. அது தெளிவா தெரியுது. 

ஸ்டாலின் ஊராட்சி சபையின் முதல் கூட்டத்தை திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சியிலதான் நடத்தினார். நல்லா கவனிச்சுக்குங்கல் அங்கே மொத்தம் ஏழாயிரத்து இருநூற்று நாற்பத்து ஏழு வாக்காளர்கள். ஆனால் ஸ்டாலினோட கூட்டத்துல கலந்துகிட்டது வெறும் முந்நூறுக்கும் கீழேதான். அதுவும் எந்த வகையில கூட்டிட்டு வரப்பட்டாங்கன்னு எங்களுக்கு தெரியும். 

ஆக வட்ட சம்மணம் போட்டு ஸ்டாலின் உட்காருகிற ஊராட்சி சபை கூட்டமானது...தி.மு.க.வோட கிளைக்கழக கூட்டம்தானே தவிர வேறில்லை. 

இந்த ஸ்டாலினும் தினகரனும் அவ்வளவு தோஸ்த்தா இருந்தாங்க. எங்களின் ஆட்சியை ஒழிக்கிறதுக்கு ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து செயல்பட்டு தொடர்ந்து தோற்றார்கள். சட்டசபையில் தினகரனுக்கு பேச வாய்ப்பு தரும் படி சிபாரிசு பண்ற அளவுக்கு தி.மு.க.காரங்க அவர்கிட்ட நட்பா இருந்தாங்க. 

ஆனா இடையில என்ன பிரச்னையோ இப்போ ரெண்டு தரப்பும் முட்டிக்கிட்டு இருக்கிறாங்க.” என்று அசால்டாக அள்ளி வீசியிருக்கிறார். 
இதைப் பார்த்து யாருக்கெல்லாமோ கொடுக்கு முளைக்கிறது! ச்சே!- என்று பொங்குகிறது தி.மு.க.
 

click me!