மன்னிப்பு கேட்கச் சொன்ன ஓ.பி.எஸ்... H.ராஜாவின் அட்மினுக்கு கண்டனம் தெரிவித்த இ.பி.எஸ்... தினகரனுக்கு கால அவகாசம்! பொலிடிகல் பாப்கார்ன்!

Asianet News Tamil  
Published : Mar 08, 2018, 05:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
மன்னிப்பு கேட்கச் சொன்ன ஓ.பி.எஸ்... H.ராஜாவின் அட்மினுக்கு கண்டனம் தெரிவித்த இ.பி.எஸ்... தினகரனுக்கு கால அவகாசம்! பொலிடிகல் பாப்கார்ன்!

சுருக்கம்

today political popcorn news

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பக்கத்தில் பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சையான கருத்து வெளியான விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் அட்மினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் டிவிட்டர் பக்கத்தில் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவு வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.

ஹெச்.ராஜாவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. ஆனால், அந்த கருத்தை எனது முகநூல் அட்மின் பதிவு செய்துவிட்டார். அதைப் பார்த்ததும் நான் நீக்கிவிட்டேன் என ராஜா விளக்கம் அளித்தார். ஆனால், அந்த விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹெச்.ராஜாவிற்கு தெரியாமல் அவரது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்ட அட்மினுக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கூறினார். எதிர்ப்பு கிளம்பியதும் அட்மின் என ராஜா பொய் சொல்கிறார் என பலரும் கருத்து கூறி வரும் வேளையில், ஹெச்.ராஜாவின் அட்மினுக்கு முதல்வர் எடப்பாடியார் கண்டனம் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பெரியார் சிலை குறித்து எச். ராஜா பேசியதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். பெரியார் குறித்து முகநூலில் தனது அட்மின் தான் பதிவு செய்தார் என்பது அபத்தமானது என அவர் தெரிவித்தார். பெரியார் விவகாரம் தொடர்பாக ஹெச்.ராஜாவின் விளக்கம் குறித்து ஆராய்ந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

தினகரனுக்கு கால அவகாசம்...

தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க மேலும் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்துக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினகரன் கடந்த 1996 -ல் இங்கிலாந்து நாட்டின் பார்க்லே வங்கியில் 1.04 கோடி அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்ததாகக் கூறி அவர் மீது அமலாக்கத் துறையினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.  இது குறித்து தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டது. இதில் இரண்டு வழக்குகளிலிருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. 

இந்நிலையில், தினகரன் வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் 2017 ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து தினகரன் மீதான அந்நியச் செலாவணி முறைகேடு வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததை அடுத்து இந்த அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!