இன்று ஓ.பி.எஸ்; நாளை தம்பிதுரை - தலைமை தேர்தல் ஆணையரிடம் சரணாகதி...

Asianet News Tamil  
Published : Mar 15, 2017, 06:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
இன்று ஓ.பி.எஸ்; நாளை தம்பிதுரை - தலைமை தேர்தல் ஆணையரிடம் சரணாகதி...

சுருக்கம்

Today opies Tomorrow tampiturai - Chief Election Commissioner and surrender

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரை தம்பிதுரை நாளை சந்தித்து பேச உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட விவகாரம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்பிரச்சனையில் வரும் 20 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தலைமைத் தேர்தல் ஆணையரை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று சந்தித்து பேசினர். 

அப்போது பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது…

இந்த பரப்பான சூழலில் பன்னீர்செல்வத்திற்கு போட்டியாக சசிகலா அணி சார்பில் தம்பிதுரை நாளை தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேச உள்ளார். அப்போது சசிகலா நியமனம் சரியானதே என்று வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?