இன்றே கடைசி நாள்.. வேட்புமனு தாக்கல் செய்ய.. சூடுபிடித்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் !!

Published : Feb 04, 2022, 07:54 AM IST
இன்றே கடைசி நாள்.. வேட்புமனு தாக்கல் செய்ய.. சூடுபிடித்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் !!

சுருக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.

முதல் 3 நாட்களில் குறிப்பிடும்படியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. முக்கிய கட்சிகளின் கூட்டணிகளில் இடப் பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்ட நிலையில், 2 நாட்களாக வேட்புமனுக்கள் அதிக அளவில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2-ம் தேதி வரை 10,153 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

நேற்றும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து,முக்கிய கூட்டணி கட்சிகளின் இடப் பங்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன.அதே சமயம்,இதுவரை 37518  வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 27,365 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். 

அனைத்து பகுதிகளிலும் மனு தாக்கல் செய்வோர் கூட்டம் இன்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது. இதனிடையே, மாவட்ட ஆட்சியர் களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஊர்வலம், நடைபயணம், சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகன பேரணிகளை நடத்துவதற்கான தடை வரும் 11-ம் தேதி வரை தொடரும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் சார்... தில் இருந்தா எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு எங்களோடு தேர்தலில் மோதிப்பாருங்கள்..! ஆதவ் சவால்..!
உங்களால பலபேர் இறந்திருக்கிறார்கள்... புதுவை மாநாட்டில் புஸ்ஸி ஆனந்திடம் சீறிய பெண் காவல் அதிகாரி