இன்று மாலை வெளியாகிறது எக்ஸிட் போல் முடிவுகள் !! இறுதி முடிவுக் 23 ஆம் தேதி !!

Published : May 19, 2019, 12:02 AM IST
இன்று மாலை  வெளியாகிறது எக்ஸிட் போல் முடிவுகள் !!  இறுதி முடிவுக் 23 ஆம் தேதி !!

சுருக்கம்

நாடு முழுவதும் இன்று 7 ஆவது மற்றும் இறுதிக்கட் வாக்குப்  பதிவு முடிவடைவதால், மாலை 6.30 மணிக்கு பல்வேறு ஊடகங்கள் நடத்திய எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட உள்ளது. 

மக்களவைத் தேர்தல்  கடந்த மாதம் 11 ஆம் தேதி தொடங்கி இன்று வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.  கடைசி கட்டமாக, 59 தொகுதிகளுக்கு, இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 39 லோக்சபா தொகுதிகளுக்கு, கடந்த ஏப்ரல் 18ல் தேர்தல் முடிந்தது. அன்று, தமிழகத்தில், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், தேர்தல் நடந்தது.சூலுார், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

அதேபோல, மக்ளவைத்  தேர்தலில், தவறு நடந்த, 13 ஓட்டுச்சாவடிகளில், இன்று மறு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. காலை, 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது.

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை அறிய, அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும்,ஆவலுடன் உள்ளனர்.முதல் கட்ட தேர்தல் துவங்கியதில் இருந்து, நாடு முழுவதும், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிட, தேர்தல் ஆணையம் தடை விதித்தது.


இன்று மாலை, 6:30 மணி வரை, கருத்து கணிப்பு வெளியிட, தடை உள்ளது. எனவே, மாலை, 6:30 மணிக்கு மேல்,ஓட்டுப் பதிவுக்கு பிந்தையகருத்து கணிப்புகள்வெளியாகும்.கருத்து கணிப்பு உண்மையா, பொய்யா என்பது, 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது தெரியும். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!