ரஜினி எடுபடமாட்டார்! தி.மு.க. தயவால் தப்பிய அ.தி.மு.க.! நிர்பந்தம் செய்தால் பிரகாஷ்ராஜ் அரசியலுக்கு வருவான்!

 
Published : Jan 03, 2018, 06:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
ரஜினி எடுபடமாட்டார்! தி.மு.க. தயவால் தப்பிய அ.தி.மு.க.! நிர்பந்தம் செய்தால் பிரகாஷ்ராஜ் அரசியலுக்கு வருவான்!

சுருக்கம்

Today Asinet political Bit news

பொறி பறக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடுவில் ‘ஏஸியாநெட் இணைய தள’ வாசகர்களுக்காக செம்ம ஸ்பீடு  மைக்ரோ பேட்டிகள்...

*     உண்மையான, நேர்மையான, நாணயமான,  ஜாதி மதசார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல்.

-      நடிகர் ரஜினிகாந்த்

*     ரஜினியின் பேட்டி தெளிவு இல்லாததைப் போல் உள்ளது. அவரது ஆன்மிக அரசியல் எடுபடாது.

-      புதுவை முதல்வர் நாராயண சாமி

*     ராணுவத்தில் உள்ளவர்கள் தினமும் சண்டையிடுகின்றனர். சண்டையில் அவர்கள் இறப்பது சகஜம்.

-      பி.ஜே.பி. எம்.பி. நேபாள் சிங்

*     ஆர்.கே.நகர் களத்தில் தி.மு.க. முறையாக ஓட்டு சேகரித்திருந்தால் அ.தி.மு.க. டெப்பாசிட் இழந்திருக்கும். தி.மு.க.வின் மெத்தனத்தால் அ.தி.மு.க. தப்பியது

-      டி.டி.வி. தினகரன்

*     எனது தோழி கவுரி லங்கேஷின் படுகொலையக்கு பிறகு தான் அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க துவங்கினேன். எனக்கு அரசியல் ஆசை கிடையாது. ஆனால் நிர்பந்தம் செய்தால் அரசியலுக்கு வர தயங்கிட மாட்டேன்.

-      நடிகர் பிரகாஷ் ராஜ்.

*     விசாரணை கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். மற்ற விஷயங்களை பகிர்வது சரியாக இருக்காது. ஜெ., சிகிச்சை தொடர்பாக வீடியோ ஆதாரம் இருப்பதாக நான்  கூறவில்லை.

-      இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா

*     எம்.ஜி.ஆர். தன் எண்ணங்களையும், நோக்கஙக்ளையும் செயல்படுத்திய மாமனிதர். அவரது உன்னதமான திட்டங்களால், ஏழை மற்றும்  ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் நிரந்தரமான இடம் பிடித்தார்.

-      கவர்னர் புரோஹித்

*     அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கியிலிருந்து ஒரு ஓட்டை கூட ரஜினி உட்பட யாரும் பெற முடியாது.

-      அமைச்சர் ஜெயக்குமார்.

*     ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரலாம். வந்தால் அதையும் சந்திப்போம். அனைவரும் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருப்பர்.

-      அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

*     என்மீது வன்மம் கொண்ட சிலர் ‘வைகோ ஆதரித்ததால்தான் ஆர்.கே.நகரில் தி.மு.க. டிபாசிட் இழந்தது.’ என பேசி வருகின்றனர். அது பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்.

-      வைகோ

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!