
ஒரு ஆடிட்டரால் அரசியல் களத்தில் அல்லு தெறிக்க விடமுடியுமென்றால் அதற்கு அக்மார்க் உதாரணம், துக்ளக் குருமூர்த்திதான்.
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவர் பயன்படுத்திய ‘impotent’ எனும் வார்த்தை அரசியலரங்கத்தை அதிர வைத்ததெல்லாம் அசால்ட் ரகங்கள்.
இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பை தொட்டு குருமூர்த்தி பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள் பெரும் சலசலப்பை துவக்கியுள்ளன.
அதாவது ‘ஆன்மிக அரசியல் வழியிலான நிர்வாகத்தை நடத்துவோம்.’ என்று ரஜினி கூறியிருந்தார். ஏற்கனவே மோடியும், ரஜினியின் நண்பர்கள் என்பதால் அவருக்காகவே ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று விமர்சனம் எழுந்த நிலையில், இந்த வார்த்தையை எடுத்து வைத்துக் கொண்டு சதிராடினர் விமர்சகர்கள்.
ஆனால் ‘ஆன்மிகம் என்பது இந்து மதத்துக்கு மட்டும் சொந்தமான வார்த்தையல்ல. கிறித்துவம், இஸ்லாம் உள்ளிட்ட எல்லா மதங்களும் இதில் அடங்கும்.’ என்று சொல்லி ஒரு விளக்கத்தை கொடுத்து விமர்சகர்களின் வாயை அடைத்தனர் ரஜினியினர் தரப்பினர்.
இந்நிலையில் ‘ரஜினியின் ஆன்மிகம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானது.’ என்று குறிப்பிட்டுள்ளார் சமீபத்தில். இது ரஜினி தரப்பின் சமாதானங்களை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு மீண்டும் விமர்சனங்களை உச்சாணி கொம்பில் ஏறி ஆட வைத்துள்ளது.
அதாவது, ’பி.ஜே.பி.யால் தமிழகத்தில் நேரடியாக கால் ஊண்ற முடியவில்லை. ஆர்.கே.நகரில் தனித்துப் போட்டியிட்டு நோட்டாவை விட மோசமான வாக்குகளைப் பெற்று வீழ்ந்துவிட்டார்கள். இந்த நிலையில்தான் பைபாஸ் ரூட்டைப் பிடித்து தமிழகத்தில் அதிகாரத்தில் நுழைய பி.ஜே.பி. முயலுகிறது.
அந்த பைபாஸ் ரூட்டானது ரஜினிதான். ரஜினி என்பவர் மோடியின் தமிழக முகமூடி. ஆன்மிக ரீதியிலும், இந்தி ரீதியிலும் இருவரும் மிக நெருக்கமானவர்கள். பிரதமர் பதவிக்கு போட்டியிடும்போது சென்னைக்கு வந்த மோடி ரஜினியின் வீட்டுக்கே சென்று அவரை சந்திக்கிறார் என்றால் எந்தளவுக்கு இருவரும் நெருக்கமானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆக ரஜினி அரசியலுக்கு வருவதென்பது பி.ஜே.பி.யை இங்கே அரசாள வைக்கத்தான். “ என்று பொரிந்து தள்ளுகிறார்கள் விமர்சனத்தை.