காவிரி விவகாரம்… இன்று அனைத்துக்கட்சி கூட்டம்…கமல் பங்கேற்பாரா?

First Published Feb 22, 2018, 7:40 AM IST
Highlights
Today all party meeting.kamal will be participate


காவிரி  விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் கமலஹாசனுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? அவர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தன. அந்த வழக்குகள் மீது கடந்த 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நீரின் அளவு குறைக்கப்பட்டது.



இது தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதிலுள்ள சாதக, பாதக அம்சங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்பிரச்சனையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை பேணிக்காக்கவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக இன்று  காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் அரசு அறிவித்தது.


இந்நிலையில் இன்று காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதே போல்  விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி சார்பில் பிரதிநிதிகளுக்கும், விவசாயிகள் சங்கம் சார்பில் தலா ஒருவரும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 10 விவசாயிகள் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் கமலஹாசனுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா? அவர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

click me!