Annamalai : கோட்டையை நோக்கி நாம் வரப்போகிறோம் என்று தெரிந்ததும் முதல்வர் எஸ்கேப் ஆகி டெல்டாவை நோக்கி சென்றுவிட்டார்.
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து தேர்தல் அறிக்கையில் கூறியவாறு திமுக அரசும் குறைக்க வேண்டும் எனவும், இதனை 72 மணி நேரத்திற்குள் அரசு செய்யவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடப்படும்,போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெடு விடுத்தார். இதனைத் தொடர்ந்து,பெட்ரோல்,டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாஜக சார்பாக பேரணி நடத்தப்பட்டது.
அதன்படி, பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முதல் சென்னை தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது.அப்போது பேரணியில் பேசிய அண்ணாமலை, 'திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து விட்டு,தற்போது அக்கறை இல்லாமல் இருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.கோட்டையை நோக்கி நாம் வரப்போகிறோம் என்று தெரிந்ததும் முதல்வர் எஸ்கேப் ஆகி டெல்டாவை நோக்கி சென்றுவிட்டார்.
கச்சத்தீவை எப்படி மீட்பது என பிரதமர் மோடிக்கு தெரியும் கச்சத்தீவை கனவிலும் கூட திமுகவால் மீட்க முடியாது' என தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை காவல் ஆணையகத்தில் சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் இணைய வழியில் புகார் அளித்துள்ளார்.அவர் அளித்துள்ள புகாரில், நேற்று நடைபெற்ற பாஜக பேரணியில் மாநில தலைவர் அண்ணாமலை,பாஜகவுக்கு எதிராக கருத்துகள் பதிவு செய்பவர்களை தாக்குவேன் என பொதுவெளியில் கூறியது கண்டனத்திற்குரியது.
எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில்,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவினர் 5,000 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்ட விரோதமாக கூடுதல்,அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் பாஜக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சென்னைக்கு அதிரடி மாற்றம்.! என்ன காரணம் தெரியுமா ?
இதையும் படிங்க : UGC: இந்த பல்கலை., பட்ட படிப்புகள் இனி செல்லாது..’யுஜிசி’ சொன்ன அதிர்ச்சி தகவல் ! மாணவர்கள் கதி ?