அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை,முதல்வர் எடப்பாடி வருவாரா? தேடும் மக்கள்

By Asianet TamilFirst Published Mar 30, 2021, 9:51 PM IST
Highlights

மாவட்டம் தோறும் ஆய்வுகள் மேற்கொண்டு தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்த  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று கொரோனா அதிகரித்து வரும் இவ்வேளையில் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண தொகை, இலவச அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கி ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காத்து, மாவட்டம் தோறும் ஆய்வுகள் மேற்கொண்டு தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்த  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று கொரோனா அதிகரித்து வரும் இவ்வேளையில் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் பொறுப்பில் இருந்து கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமியை, கொரோனா இரண்டாவது அலையால் தொற்று அதிகரித்து வரும் இந்த வேளையில் முதலமைச்சர் மீண்டும் களத்தில் இறங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேர்தல் காலம் என்பதால் அதிகாரிகள் கையில் உள்ள அரசு நிர்வாகத்தை வேகமெடுக்க வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.

கொரோனாவால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1000 ரூபாய் ரொக்கம் வழங்கினார். இது தவிர, ரேஷன் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு இலவசமாக வழங்கியது. கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த சிகிச்சை  அளித்திடும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

கொரோனா பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா பரிசோதனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகரிக்க உத்தரவிட்டு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிந்து கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இது தவிர, தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டிலேயே அதிகளவில் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் மாநிலம் என்ற நிலையை தமிழகம் எட்டியது. இது தவிர காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது. கொரோனா அதிகமுள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டார். இந்த நடவடிக்கைகளால், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசு நிர்வாகம் அதிகாரிகளிடம் சென்றது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது, இரண்டாவது அலையாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால் பொதுமக்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பரவலை தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் களத்தில் இறங்கி தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்காக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

click me!