ஊரே முடங்கினாலும் ஊர் ஊராக கொரோனாவைக் கட்டுப்படுத்தினேன்... விராலிமலையில் உருகிய விஜயபாஸ்கர்!

By Asianet TamilFirst Published Mar 30, 2021, 9:32 PM IST
Highlights

ஊரைக் காக்கும் காவல்காரனை போல ஊருக்கு வெளியே நின்று காவல் காத்துக்கொண்டு தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கும் குறைவான நாட்களே அவகாசம் இருப்பதால், வேட்பாளர்கள் தொகுதிக்குள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜய பாஸ்கரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். 
இன்று தொகுதியில் அவர் பிரசாரத்தில் பேசுகையில், “கொரோனா என்ற பெரிய நோய் உலகத்தையே தாக்கியபோது  சிறு கடைகள் முதல் விமானங்கள் வரை இயங்கவில்லை. அந்த நிலையிலும்  நான் ஊர் ஊராக சென்று கொரோனாவைக் கட்டுப்படுத்தினேன்.  நம்முடைய மக்கள் எனக்காக போட்ட ஒற்றை ஓட்டுதான் இத்தனை உயிர்களையும் காப்பாற்றியது. இதேபோல இந்தத் தேர்தலில் மக்கள் போடக்கூடிய ஒவ்வொரு ஓட்டும் 7 மாவட்டங்களின் விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் போகிறது. காவிரி நீரை இங்கு கொண்டு வரவும் போகிறது.


 நான் காவல்காரனைப் போல மக்களைக் காக்கிறேன். ஊரைக் காக்கும் காவல்காரனை போல ஊருக்கு வெளியே நின்று காவல் காத்துக்கொண்டு தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறேன்” என்று விஜயபாஸ்கர் பேசினார்.

click me!