TN Local Body Elections 2022: அரசியல்வாதிகள் நாட்டை விற்கிறார்கள்.. மக்கள் ஓட்டை விற்கலாமா.? டி. ஆர் ஆவேசம்.

Published : Feb 19, 2022, 05:17 PM IST
TN Local Body Elections 2022: அரசியல்வாதிகள் நாட்டை விற்கிறார்கள்.. மக்கள் ஓட்டை விற்கலாமா.?  டி. ஆர் ஆவேசம்.

சுருக்கம்

தேர்தல்  வந்துவிட்டால் ஆயிடுமா  பேக்அப்..  ஆயிடுமா டேக் அப் என்றார். மேலும் பேசிய அவர் இந்த கட்சி எவ்வளவு கொடுக்கும், அந்த கட்சி எவ்வளவு கொடுக்கும் என்ற நிலைக்கு மக்கள் ஆகிவிட்டார்கள். 

அரசியல்வாதிகள் நாட்டை விற்கிறார்கள் என்றால்  மக்கள் ஓட்டு விற்கக் கூடாது என நடிகர், இயக்குனர் டி. ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார். இப்படி விற்றால் உள்ளாட்சித் துறையில் எப்படி நல்ல சாலை கிடைக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பொதுமக்கள் என காலை முதல் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் பல கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் பன்முனை போட்டி நிலவுகிறது, ஆனாலும் அதிமுக திமுகவுக்கு  இடையிலான மோதலாகவே இந்த தேர்தல் உள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும் லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் வழக்கம்போல ஆட்சியாளர்களையும் அரசியல்வாதிகளையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார். வாக்களிக்க வரும் மக்கள் அனைவருமே சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா என ஆவேசமாக கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் வந்துவிட்டால் கொரோனா பேக்அப் ஆகிவிடுமா? தேர்தல் இல்லாத நேரத்தில் கொரோனா போட்டுக்கொள்ளும் மேக்அப் என்று தனது பாணியில் எதுகை மோனையில் பேசினார்.

தேர்தல்  வந்துவிட்டால் ஆயிடுமா  பேக்அப்..  ஆயிடுமா டேக் அப் என்றார். மேலும் பேசிய அவர் இந்த கட்சி எவ்வளவு கொடுக்கும், அந்த கட்சி எவ்வளவு கொடுக்கும் என்ற நிலைக்கு மக்கள் ஆகிவிட்டார்கள். ஆனாலும் ஜனநாயகத்திற்கு வாக்களிக்க சிலர் உள்ளனர் அவர்கள் வாழ்க. அரசியல்வாதிகள் நாட்டை விற்கிறார்கள் என்றால் மக்கள் ஓட்டை விற்கக்கூடாது. இப்படி விற்றால் உள்ளாட்சித் துறையில் எப்படி நல்ல சாலை கிடைக்கும். எப்படி நாடு நன்றாக இருக்கும்? மக்கள் தான் சிந்திக்க வேண்டும். இப்படி பேசிக் கொண்டே இருப்பதால் என்ன மாற்றம் வரும் என்று கேட்கலாம், மாற்றம் வரும் வரை பேசிக் கொண்டே இருபோம் என்றார். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து ஓட்டு வாங்கினது அந்தக் காலம், இப்ப நோட்டை வைத்து ஓட்டு வாங்கி விடலாம் என்பது இந்த காலம். இவ்வாறு என அவர் பேசினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!