Kovai : ஸ்டாலினின் அந்த 4 வார்த்தை.. சொல்லியடித்த செந்தில் பாலாஜி.. வேலுமணி சறுக்கியது எங்கே ?

By Raghupati RFirst Published Feb 23, 2022, 1:06 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் அதிமுக பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது, திமுகவின் எந்த வகையான திட்டங்களும் செல்லுபடியாகாத ஒரு இடமாகவே பார்க்கப்பட்டது கோவை மாவட்டம். தேர்தல் முடிவுகளும் கூட அதிமுகவிற்கு சாதமாகவே அமைந்தது. கட்சியைத் தாண்டியும் அந்த பகுதி எம்.எல்.ஏக்கள் செய்த நலப்பணிகள் தான் அதற்கு காரணம் என்று பல தரப்பினரும் கூறினர். இதனையெல்லாம் தவிடு பொடியாக்கியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கடந்த சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் வெற்­றி­பெற்று ஆட்சி அமைத்த போதி­லும், கொங்கு மண்­ட­லத்­தில் திமு­க­வால் முத்­திரை பதிக்க முடி­ய­வில்லை என்ற வருத்­தம் தமக்கு இருப்­ப­தாக முதல்­வர் மு.க.ஸ்டாலின் வெளிப்­ப­டை­யா­கவே கூறி இருந்­தார்.

இதற்கு பிறகு தான், கோவை மாவட்டத்துக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதிமுகவின் கோட்டையாக இருக்கும் ஒரு இடத்தில் வெறும் வளர்ச்சி பணிக்காக மட்டும் ஒருவரை நியமிப்பதற்கு பதிலாக, திமுக கால்தடம் பதிக்கும் அளவிற்கு வலிமையான நபரை உள்ளே களம் இறக்க வேண்டும் என்று விரும்பியது.

எஸ்.பி. வேலுமணியின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட்டார் என்றே கூறலாம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்கரபாணி இருவராலும் பெரிய பலன் கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் வியூகம் வகுப்பதில் தேர்ச்சி பெற்றவராக கருதப்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி கோவைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 

உதயநிதி ஸ்டாலினை அழைத்து வந்து, நிர்வாக கூட்டம் நடத்தியது முதல், பொறுப்புகளை கட்சித் தலைவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தது வரை அனைத்து பணிகளையும் மேற்கொண்டார் செந்தில் பாலாஜி.  திமுகவில் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு ஆகியவற்றால் அதிருப்தி அடைந்தார்கள். அவர்களை சமாதானம் செய்து திருப்தி படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு.

அதிமுகவில் இதே பிரச்னை தான் என்றும், அது வெளியே தெரியவில்லை என்றும் கூறப்பட்டது. தற்போதைய முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. அதிமுகவின் கோட்டை என்று சொன்ன 'கோவை' தற்போது திமுகவின் கோட்டையாக மாற்றி சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி. திமுக மட்டும் குறைந்தது கோவையில் உள்ள 51 வார்டுகளில் வென்றுள்ளதன் மூலம் திமுகவைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாகக் கோவை மாநகராட்சி மேயர் ஆகும் வாய்ப்பு அமைந்துள்ளது.

இது கோவை திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், வரும் காலத்தில் திமுகவின் வீக் லிங்காக இருக்கும் கோவையை வலுப்படுத்த இது பெரியளவில் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது சொன்ன, 'உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி' என்பதை கொங்கு மண்டலம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக தேர்தல் முடிவுகளுமே முடிவு செய்துள்ளது.

click me!