காங்கிரஸ் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி..! வாக்கு சதவிகிதத்தில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி அசத்தல்..!

Published : Feb 23, 2022, 12:47 PM IST
காங்கிரஸ் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி..! வாக்கு சதவிகிதத்தில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி அசத்தல்..!

சுருக்கம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக பாஜகவை உருவாக்கிய காட்டுவேன் என்றும் விரைவில் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கூறிவந்தார். இந்தநிலையில் நகர்ப் புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி பல்வேறு வியூகங்களை அமைத்தது. முதலாவதாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக இடப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக கழட்டி விடப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக கட்சிகளின் மட்டுமல்ல தேசிய கட்சிகளையும் யார் பெரிய கட்சி என்று சோதித்துப் பார்க்கும் தேர்தலாக அமைந்துள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக பாஜகவை உருவாக்கிய காட்டுவேன் என்றும் விரைவில் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கூறிவந்தார். இந்தநிலையில் நகர்ப் புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி பல்வேறு வியூகங்களை அமைத்தது.முதலாவதாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக இடப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக கழட்டி விடப்பட்டது.

இதனால. குறுகிய நாட்களிலேயே  12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் பாஜக தள்ளப்பட்டது. இதேபோல மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் சட்டமன்றத்தில் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 18 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை நிரூபித்தது. சட்டமன்ற தேர்தல் கிடைத்த வெற்றியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது.

இதில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை காங்கிரஸ் கட்சி  பெற்றுள்ளது. 73 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களையும், 151 நகராட்சி உறுப்பினர்களையும், 368 பேரூராட்சி வார்டுகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி 4.27 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது. பாரதிய ஜனதா கட்சி பொருத்தவரை 2.62 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது. 

மாநகராட்சி யை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி 5.31 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1.60 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. நகராட்சி தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 3.93 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1.46 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. பேரூராட்சி வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி 4.83 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 3.02 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது.

எனவே பாரதிய ஜனதா கட்சி தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று கூறிவரும் நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள  வாக்கு சதவிகித  அடிப்படையில் தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.  இதற்கு அடுத்தபடியாக தான் பாரதிய ஜனதா கட்சியானது உள்ளது. அதே நேரத்தில் தேமுதிகவும் ஒரு சதவீதத்துக்கு கீழேயே வாக்கு சதவீதத்தை பெற்று மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!