TN Local Body Election Result: நம்பி களமிறக்கிய அண்ணாமலைக்கு வெற்றியை பரிசாக கொடுத்த உமா ஆனந்தன்.

Published : Feb 22, 2022, 05:34 PM IST
TN Local Body Election Result: நம்பி களமிறக்கிய அண்ணாமலைக்கு வெற்றியை பரிசாக கொடுத்த உமா ஆனந்தன்.

சுருக்கம்

ஆனால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுசீலா கோபாலகிருஷ்ணனைவிட  2000  வாக்குகள் கூடுதலாக பெற்று உமா ஆனந்தன் அமோக வெற்றி பெற்றுள்ளார். 

சென்னை மாநகராட்சியில் 134 ஆவது வார்டில் களமிறங்கிய பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெறும் 8 ஒட்டுகள் வாங்கி தோல்வி அடைந்துவிட்டார் என பலரும் வதந்தி பரப்பிவந்த நிலையில் அவர் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளார். இது பாஜக வேட்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என பாஜக முடிவெடுத்து தேர்தலை சந்தித்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பாஜக பிரசாரத்தை தொடங்கிய நிலையில், பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் சென்னையில் களம் இறக்கப்பட்டார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள 134 வது வார்டில் உமா ஆனந்தன் போட்டியிட்டார். பல தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் மேடைகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டிக் கொண்டவர்தான் உமா ஆனந்தன். ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் அப்போது பீட்டா அமைப்புக்கு ஆதரவாக பேசியது பெரும் சர்ச்சையானது. தொடர்ந்து திராவிட கோட்பாடுகளுக்கு எதிராகவும், தமிழ் அமைப்புகளுக்கு எதிராக அவர் பேசி வருகிறார். இதேபோல் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கோட்சே குறித்து அவர் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையானது. கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றார் அது அவரைப் பொறுத்தவரையில் நியாயம் என்றும், அவர் ஒரு இந்து,  இப்பவும் சொல்கிறேன் எனக்கு அது மிகவும் பெருமையாக உள்ளது என்றார்.

அவரின் இந்த பேச்சு குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இப்படிப்பட்ட ஒருவரை எப்படி பாஜக வேட்பாளராக தேர்வு செய்தனர் என பலரும் அவரை வறுத்தெடுத்து வந்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் உமா ஆனந்தனை பகிரங்கமாக விமர்சித்து வந்தனர். பாஜக அண்ணாமலை  உங்களின் வேட்பாளர் தேர்வு அறுமை, நல்ல தேர்வு பண்ணியிருக்கீங்க கண்ணா... மோடியின் உண்மையான தொண்டன் என்று விமர்சித்து வந்தனர். இதேபோல ஜாதிகள் இல்லை என்றால் நம்முடைய கலாச்சாரம் அழிந்துவிடும் என ஜாதிக்கு ஆதரவாகவும் உமா ஆனந்தன் பேசி வருகிறார். நான் ப்ராமின் என்பதால் நான் பெருமை கொள்கிறேன் என்று அவர் பேசிய பேச்சுக்களும் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.

அவர் போட்டியிட்ட சென்னை மாநகரின் 134வது வார்டில் மொத்தம் 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் அதில் மூன்று பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 12 பேர் களத்தில் இருந்தனர். அதிமுக சார்பில் அனுராதா பாலாஜியும், திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் சுசிலா கோபாலகிருஷ்ணன் போட்டியிட்டார், காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், 134 வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெறும் 8 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துவிட்டார் என்றும், கோட்சேவுக்கு ஆதரவாக பேசிய உமா ஆனந்தனுக்கு  படு தோல்விதான் மக்கள் கொடுத்த பரிசி என்றும் பலரும் விமர்சித்து வந்தனர். 

ஆனால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுசீலா கோபாலகிருஷ்ணனைவிட  2000 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று உமா ஆனந்தன் அமோக வெற்றி பெற்றுள்ளார். அதற்கான வெற்றிச் சான்றிதழையும் அவர் பெற்றுள்ளார்.

 

காங்கிரஸ் - சுசீலா கோபாலகிருஷ்ணன் - 3503 (5+1708+1173+617)

பாஜக - உமா ஆனந்தன் - 5539 
(12+1373+2988+1166) 

அதிமுக - அனுராதா - 2695 (6+1123+980+586) இதன் மூலம் பாஜக சென்னையில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!