புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த மாவட்டச் செயலாளரின் காலில் விழுந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் செயலால் தொண்டர்களிடையே சலசலப்பு.
தமிழக முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று வடக்கு ராஜ வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் ஊர்வலமாக வந்து மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி சரியாக 9 மணி அளவில் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சரியாக 9 மணிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான ரகுபதி மாலை அணிவிப்பதற்காக அண்ணா சிலை அருகே வந்துவிட்டார். மேலும் இன்று தமிழக முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை துவக்கி வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை சிவபுரத்தில் உள்ள ஜே ஜே கல்லூரியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் செல்ல பாண்டியன் தாமதமாக அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு வருகை தந்தார். அப்பொழுது தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திடீரென அண்ணா சிலைக்கு வருகை தந்த வடக்கு மாவட்ட கழக செயலாளர் செல்லபாண்டியன் காலில் விழுந்து வணங்கியதால் அந்தப் பகுதியில் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டது.
மாற்றுத் திறனாளியின் பஞ்சர் கடையில் கம்பிரசர் வெடித்து திடீர் விபத்து; 4 பேர் படுகாயம்
மேலும் அண்ணா சிலையில் மாலை அணிவிக்க முயற்சிக்கும் பொழுதும் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் செல்ல பாண்டியனை பார்த்து கையெடுத்து வணங்கிக் கொண்டு மாலை அணிவித்தது கட்சி நிர்வாகிகள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா புதுக்கோட்டை நகரக் கழகச் செயலாளர் செந்தில் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.