ஈழத்தமிழர் முகாம்களில் வசிக்கும் குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்க வேண்டும்… சீமான் வலியுறுத்தல்!!

By Narendran S  |  First Published May 28, 2023, 8:48 PM IST

ஈழத்தமிழர் முகாம்களில் வசிக்கும் அனைத்து குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 


ஈழத்தமிழர் முகாம்களில் வசிக்கும் அனைத்து குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், மதுரை மாவட்டம், ஆனையூர் ஈழத்தமிழர் முகாமில் வசித்துவரும் அன்புமகள் ரித்யுஷா 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் பெற்றும், மேற்படிப்பு படிக்க வசதியற்ற ஏழ்மைநிலையில் இருக்கும் செய்தியறிந்தவுடன், ரித்யுஷாவின் உயர்கல்வி செலவை முழுமையாக ஏற்றதுடன், கல்லூரியிலும் இடம் பெற்றுக்கொடுத்த தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர், அன்பிற்கினிய சகோதரர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதையும் படிங்க: 3 மருத்துக்கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்... வைகோ கண்டனம்!!

Tap to resize

Latest Videos

அடிப்படை வசதிகள் ஏதுமற்று, குறைந்தபட்ச கற்கும் வாய்ப்புகள் கூடக் கிடைக்கப்பெறாத, தமிழ்நாட்டின் வதை முகாமில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். அந்த வகையில் தனிப்பட்ட முறையில் தாங்கள் செய்த பேருதவி ஒரு குழந்தையின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த போதிலும், அதனை தமிழ்நாடு அரசே முன்னெடுக்கும்போதுதான் நம்மையே நம்பி வந்துள்ள ஈழச்சொந்தங்கள் அனைவரின் வாழ்விலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இதையும் படிங்க: நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு? அண்ணாமலை கேள்வி?

ஆகவே, மாண்புமிகு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டுச்சென்று, ஈழத்தமிழர் முகாம்களில் வசிக்கும் அனைத்து குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  

click me!