சீமானையும் திருமாவளவனையும் கைது செய்யுங்கள்… அரசுக்கு எச்.ராஜா வலியுறுத்தல்!!

By Narendran SFirst Published Sep 29, 2022, 11:19 PM IST
Highlights

தமிழக அரசு சீமானையும் திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். 

தமிழக அரசு சீமானையும் திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதால் மத்திய அரசு அதை தடை செய்துள்ளது. ராமலிங்கத்தை கொலை செய்தது PFI. இதுபோல பல கொலைகள் மற்றும் பயங்கர வாதத்தில் ஈடுபட்ட காரணத்தால் நேற்றைய தினம் PFI  மற்றும் தொடர்புடைய அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பதும் ஆதரவாக கருத்து தெரிவிப்பதும் தண்டனைக்குரிய குற்றம். 1991ல் அரசு தகவல்களை எல்டிடி இயக்கத்திற்கு கசிய விட்டதால் திமுக அரசு கலைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு மறுப்பு... சீமான் வரவேற்பு!!

விசிக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவுக்கு ஆதரவாக அழைப்பு விடுத்துள்ளது. PFI மாநாட்டில் பேசும் பொழுது PFI-ஆ ஆர்.எஸ்.எஸ்-ஆ என்ற யுத்தம் துவங்கியுள்ளது என்று பேசியுள்ளார். அதனால் தெள்ளத் தெளிவாக திருமாவளவன் தேசவிரோதி, சீமான் காஷ்மீரில் 24 இந்துக்களை கொன்றேன் என்றுஅறிக்கை விட்ட யாசின் மாலிக் அழைத்து வந்து கூட்டம் போட்டு வன்முறைக்கு துணை போகிற கொலைகாரன். தமிழக அரசு சீமானையும் திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும். ஸ்டாலின் அப்பாவி எனது நண்பர் அவருக்கு ஒருபுறம் சீமானும் மறுபுறம் திருமாவளவனும் கொம்பு சீவி விடுகிறார்கள். ஸ்டாலின் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: திராவிட மாடலை உருவாக்கியதே நாங்கள் தான் - பழனிசாமி தடாலடி

சர்வதேச பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் யாரும் ஆதரவாக செயல்பட அனுமதிக்க கூடாது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை என்பது நீதிமன்ற அவமதிப்பாகும். காவல்துறையிடம் கேட்டு தான் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. டிஜிபி நீதித்துறைக்கு தலை வணங்க வேண்டும். நீதிமன்றத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் எதிராக டிஜிபி செயல்படுகிறார். மக்களிடம் முறையிடுவோம். மொழி மாநிலத்தின் பெயரால் வன்முறை வளர்க்க யார் முடிவு செய்தாலும் பாஜக அடக்கும். தேசவிரோத தீய சக்திகளை தமிழக காவல்துறை கைது செய்யவில்லை. NIA தான் கைது செய்துள்ளது. உளவுத்துறை அறிக்கையில் தமிழகத்தை பற்றியும் கூறியுள்ளது. தமிழக அரசு தேசவிரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

click me!