ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தி நாளான அக்.2 ஆம் தேதி தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என தெரிவித்து இந்த அணிவகுப்புக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இதையும் படிங்க: திராவிட மாடலை உருவாக்கியதே நாங்கள் தான் - பழனிசாமி தடாலடி
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பக்கத்தில், மக்கள் மனதில் மதவெறியை தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன்.
இதையும் படிங்க: நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவைக்க சதி.. RSS-ஐ தடை பண்ணுங்க.. அலறி துடிக்கும் திருமாவளவன்.
மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன்.
(1/3)
சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும். இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டும். மேலும், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.