குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு ….  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழக அரசு!!

First Published Mar 12, 2018, 9:59 AM IST
Highlights
TN govt announces 9 persons killed thefire accident in kurangini


தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையைச் சேர்ந்த 6 பேரும், ஈரோட்டைச் சேர்ந்த 3 பேரும் தீயில் கருகி உயிரிழந்ததாக  அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்து 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 37 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் இன்று திங்கள்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், மலை ஏறி திரும்பும் போது அவர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் தனிதனியாக பிரிந்து சென்றுள்ளனர். அதில் இதுவரை 27 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ட்ரெக்கிங் சென்ற சென்னையைச் சேர்ந்த 6 பேரும், ஈரோட்டைச் சேர்ந்த 3 பேரும் தீயில் கருகி உயிரிழந்ததாக  அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.

தீ பரவியதையடுத்து தப்பிப்பதற்காக இந்த 9 பேரும் அங்கிருந்த மிகப் பெரிய குழியில் குதித்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

click me!