அச்சுறுத்தும் டெல்டா பிளஸ்... தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 25, 2021, 2:28 PM IST
Highlights

தமிழகத்தில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தை பாடாய் படுத்தி வந்த கொரோனா 2வது அலை தாக்கம் தற்போது சற்றே குறைந்துள்ளது. ஆனால் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் மற்றும் கருப்பு பூஞ்சை வைரஸின் தாக்கம் பொதுமக்களை அச்சத்தியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, கேரளத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் தற்போது டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒவ்வொரு முறையும் மரபணு வரிசையை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைக்காக மாதிரிகளை பெங்களூரு அனுப்ப வேண்டி உள்ளதால் கால தாமதம் ஏற்படுவதாகவும், எனவே சென்னையில் டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனைக்கான கூடங்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக அவர், எதிர்காலத்தில் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்பு அதிகரிக்க கூடாது என்பதற்காக சென்னையில் புதிய பகுப்பாய்வு மையத்தை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் தமிழகத்தில் பெரும் பாதிப்புகள் இல்லை எனக்கூறினார். 

டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என்றும்,  தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும், மகிழ்ச்சியான செய்தியாக நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக 4 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

click me!