#BREAKING அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ உட்பட 5 பேர் நீக்கம்... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

By vinoth kumarFirst Published Jun 25, 2021, 2:13 PM IST
Highlights

சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த சம்மந்தமும் இல்லை என்றே ஓபிஎஸ், இபிஎஸ் கூறி வருகின்றனர். மாவட்டந்தோறும் அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது.

சசிகலாவிடம்  தொலைபேசியில் பேசிய மேலும் 5 நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது அதிமுகவினரிடம் பேசும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த சம்மந்தமும் இல்லை என்றே ஓபிஎஸ், இபிஎஸ் கூறி வருகின்றனர். மாவட்டந்தோறும் அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சசிகலாவிடம் போனில் பேசிய மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகக் கட்டுபாய் மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்து ரவிச்சந்திரன் (கழக வர்த்தக அணிச்செயலாளர்), KR.கந்தசாமி Ex Mla(ஈரோடு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்), SP.ரமேஷ் (ஈரோடு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச்செயலாளர்), VC.வரதராஜ் (சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்), PK.காளியப்பன் (கோபிசெட்டிபாளையம் நகர கழகச் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!