அடிதூள்... 1,212 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு... தமிழக சுகாதாரத்துறை அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 4, 2021, 11:32 AM IST
Highlights

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 1,212 செவிலியர்களின் ஒப்பந்தம் நாளையுடன் நிறைவடைந்த நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 1,212 செவிலியர்களின் ஒப்பந்தம் நாளையுடன் நிறைவடைந்த நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

2015 - 2016ம் ஆண்டு நடந்த எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்திருந்த 1,212 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்த போதும், அவர்களுக்கு இரவு,பகல் பாராமல் பணியாற்றினர். ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிர்காக்க போராடி செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வந்த 1,212 செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் இதுவரை 15 ஆயிரம் ரூபாயாக இருந்த செவிலியர்களின் ஊதியம் இனி ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் வரும் 5ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் தமிழக அரசு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சென்னையில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1,212 பேரும் 10ம் தேதிக்கு முன்னதாக சென்னையில் பணிக்கு சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் 1,212 செவிலியர்களும் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tags
click me!