TN election Result: மாந, பேரூ, நகராட்சிகளை தட்டி தூக்கிய திமுக... பின்தங்கிய அதிமுக.. காணாமல் போன பாமக, பாஜக.

Published : Feb 22, 2022, 10:08 AM IST
TN election Result: மாந, பேரூ, நகராட்சிகளை தட்டி தூக்கிய  திமுக... பின்தங்கிய அதிமுக.. காணாமல் போன பாமக, பாஜக.

சுருக்கம்

138 நகராட்சிகளில் 91 நகராட்சிகளில் திமுகவே முன்னிலையில் உள்ளது. அதிமுக 8 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளது. அதேபோல் 489 பேரூராட்சிகளில் 233 பேரூராட்சிகளில் திமுகவும், வெறும்29 பேரூராட்சிகளில் அதிமுகவும், 5 பேரூராட்சிகளில் பாஜகவும், 2 பேரூராட்சிகளில் பாமகவும், 2 பேரூராட்சிகளில் அமமுகவும் முன்னிலை பெற்றுள்ளது.  

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். 18 மாநகராட்சிகளில் திமுக முன்னிலையில் உள்ள நிலையில் ஒரு இடத்தில் கூட அதிமுக மற்றும் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் முன்னிலை பெறவில்லை. 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தம் 12601 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன, பின்னர் வேட்பாளர்கள்  முகவர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் அகற்றப்பட்டு  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . வழக்கம்போல சென்னை திமுகவுக்கு தான் என்பது ஓரளவுக்கு உறுதியாகி விட்டது, அதேபோல் அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கும் திமுகவே ஆதிக்கம் செலுத்தி வருவதை காணமுடிகிறது.

காலை 9:30 மணி தகவலின்படி மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 18 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக, பாஜக, பாமக ஒரு மாநகராட்சியில் கூட இல்லை. 138 நகராட்சிகளில் 91 நகராட்சிகளில் திமுகவே முன்னிலையில் உள்ளது.அதிமுக 8 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளது.

அதேபோல் மொத்தம்  489 பேரூராட்சிகளில் 233 பேரூராட்சிகளில் திமுகவும், வெறும்29 பேரூராட்சிகளில் அதிமுகவும், 5 பேரூராட்சிகளில் பாஜகவும், 2 பேரூராட்சிகளில் பாமகவும், 2 பேரூராட்சிகளில் அமமுகவும் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளில் 18 இடங்களிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளதால் திமுக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

கோவை, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளையாகவது பாஜக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த இடத்திலும் அக்காட்சிக்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது. இதனால் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!