நாங்குநேரி: ஒத்த வேட்பாளரின் பெயரை அறிவிக்க இத்தனை அலப்பறையா...? டெல்லியில் காத்திருக்கும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்!

By Asianet TamilFirst Published Sep 27, 2019, 6:48 AM IST
Highlights

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. இதேபோல அதிமுகவும் இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் பெயரை அறிவித்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி இன்னும் தங்கள் கட்சி வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை.
 

நாங்குநேரியில் ஒத்த வேட்பாளரின் பெயரை அறிவிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். 

நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதியைக் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு திமுக விட்டுக்கொடுத்துவிட்டது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. இதேபோல அதிமுகவும் இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் பெயரை அறிவித்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி இன்னும் தங்கள் கட்சி வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு உதவும் வகையில் அதன் கூட்டணி கட்சியான திமுக, நாங்குநேரியில் ஐ.பெரியசாமி தலைமையில் கனிமொழி உட்பட தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது. இன்று முதல் இந்தக் குழு தேர்தல் பணியில் ஈடுபட உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாங்குநேரியில் போட்டியிட குமரி அனந்தன் உள்பட 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் முயற்சி செய்துவருகிறார்கள்.

Latest Videos


காங்கிரஸ் கட்சியின் ஒத்த வேட்பாளரை தேர்வு செய்ய தமிழக காங்கிரஸ் கமிட்டி,. டெல்லி தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, வசந்தகுமார் எம்.பி, உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். நாங்குநேரியில் யார் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதை எடுத்துச் சொல்லி அந்த வேட்பாளருக்கு காங்கிரஸ் தலைமையின் உத்தரவை பெற உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக டெல்லி செல்லும் முன் கே.எஸ். அழகிரி கூறும்போது, “ நாங்குநேரி வேட்பாளரின் பெயர் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். 

click me!