நாங்குனேரி தொகுதி இடைத் தேர்தல்… உள்குத்துக்கு தயாராகி வரும் காங்கிரஸ் நிர்வாகிகள் !!

By Selvanayagam PFirst Published Sep 26, 2019, 11:27 PM IST
Highlights

நாங்குனேரி தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த 8 பேரின் மனுக்கள் நிராகப்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்த 8 பேரும் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக, நாம் தமிழ்ர் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. திமக கூட்டணி சார்பில் நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஆனால் அதன் கூட்டணி கட்சியான திமுக நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்காக ஐ.பெரியசாமி தலைமையில் கனிமொழி உட்பட தேர்தல் பணிக்குழுவை அறிவித்து விட்டது. 

இந்தநிலையில் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நான்கு நாட்களில் சுயேட்சை வேட்பாளர்கள் தச்சநல்லூரை சேர்ந்த ராகவன் மற்றும் எல்லா தேர்தல்களிலும் போட்டியிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன் ஆகிய இருவர் மட்டும் தான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


    
இதற்கிடையில் இன்று நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகம் வந்து சுயேட்சையாக போட்டியிடுவதற்காக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் தமிழ்செல்வன் மனு வாங்கி சென்றார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் காங்கிரசில் சீட் கேட்டு தலைமைக்கு மனு கொடுத்தோம். அப்போது எங்களிடம் தேர்தலில் போட்டியிட்டு செலவு செய்ய போதுமான அளவுக்கு பணம் இல்லையாம் அதனால் சீட் இல்லையென்று கூறிவிட்டனர். 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு சீட் கொடுக்க வில்லையென்றால் அந்த 8 பேரும் சுயேட்சையாக போட்டியிடுவோம் என்றார். இது நெல்லை மாவட்ட காங்கிரஸ் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!