தமிழக காங்கிரஸ் தலைவராகிறார் ப. சிதம்பரம் ? மின்னல் வேக மாற்றத்துக்கு தயாராகும் ராகுல் காந்தி !!

By Selvanayagam PFirst Published Oct 4, 2018, 7:10 PM IST
Highlights

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்ற அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல் விலை உயர்வு, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், பொருளாதார நெருக்கடி, 5 மாநில தேர்தல் என பல நெருக்கடிகளை மத்திய அரசு சந்தித்து வருகிறது. ஆனால் மத்திய பாஜக அரசு மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை காங்கிரஸ் பயன்படுத்த தவறி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இன்னும் 6 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்னும் தங்களது கூட்டணி வேலைகளை தொடங்கவில்லை. கிட்டத்தட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நிலையில், இப்போது தான் ராகுல் காந்தி கூட்டணி வேலைகளைத் தொடங்கியுள்ளார். பல மாநிலங்களில் கூட்டணி தொடர்பாக போச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பு  தலைவரை மாற்ற வேண்டும் என ராகுல் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவுடன் வலுவான கூட்டணி அமைய வேண்டும் என்றால் தற்போதைய தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து  ப.சிதம்பரதையே தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. அதே நேரத்தில் சிதம்பரம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக இருப்பதால், தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்போற்றுக் கொள்வாரா என்பது சந்தேகமே என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.

click me!