நாங்க சொல்றதை செய்யுங்க.. அடுத்த ஆளுங்கட்சி நாம தான்.. திமுகவை அலரவிடும் காங்கிரஸ்..

By Raghupati RFirst Published Feb 28, 2022, 5:45 AM IST
Highlights

‘தமிழகத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக ஒரு நாள் மாறும்’ என்று செய்தியாளர்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் கே.எஸ் அழகிரி. 

கே.எஸ் அழகிரியின் இந்த பேச்சு,  ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டுள்ளது. சொல்லப்போனால் வாரிச் சுருட்டியிருக்கிறது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தாங்கள் தான் 3ஆவது பெரிய கட்சி என்று கூறி வருகிறார். மற்ற மாநிலங்களில் முதலிடத்துக்கு தான் போட்டி இருக்கும். தமிழ்நாட்டில் மட்டும் 3ஆவது யார் என்பதில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் குடுமிபிடி சண்டை போய் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் திமுகவின் கூட்டணியில் இருந்துகொண்டு ஒருநாள் ஆளுங்கட்சியாக மாறும் என அவர் பேசியிருப்பது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் மற்றும் அமைப்பு தேர்தல் குறித்து கலந்துரையாடல் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்ப்பு பணிகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்ப்பது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. 

அகில இந்திய காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணையின்படி உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை நிறைவு செய்வது குறித்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கையை பலப்படுத்த வேண்டும். 

ஒவ்வொரு வாக்குசாவடியிலும் குறைந்தது 10 பேரையாவது சேர்க்க வேண்டும். குறைந்த உறுப்பினர்களாக இருந்தாலும், உண்மையானவர்களாக இருக்க வேண்டும். உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரித்தால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பெறலாம்’ என்று கூறியியிருக்கிறார்.

click me!