புண்ணியம் தேடவே குளங்களை தூர் வாருகிறார் ஸ்டாலின்… எடப்பாடி பழனிசாமி கிண்டல்…

First Published Jul 30, 2017, 8:34 AM IST
Highlights
TN chief Minister speak about M.K.Staline


விவசாயிகள் வாழ்க்கையில் திமுகவினர் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் புண்ணியம் தேடவே மு.க.ஸ்டாலின் கோவில் குளங்களை தூர் வாருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,
குடிமராமத்துத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்,

1,519 ஏரிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு அந்த ஏரிகளில் இருக்கிற வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளுவதற்கு அனுமதி அளித்து வருகிறது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ,  சென்னை சைதாப்பேட்டை கோதண்டராமர் கோவில் குளத்தில் தூர்வாரினார். எல்லோரும் ஏரி, குளங்களில் தூர்வாருவார்கள். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் கோவில் குளத்தில் தூர் வாருகிறார்.

இந்த கோவில் குளம் பல ஆண்டுகளாக வறண்டு கிடந்தது. அப்போது எல்லாம் ஸ்டாலினுக்கு  கண்  தெரியவில்லை. நான் தூர்வாரியதையொட்டி, இந்த அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று எண்ணி, கோவில் குளத்தை தூர்வாரினார் என அவஙா கூறினார்.

அதுவும் நல்லது தான். ஏனென்றால், கோவில் குளத்தை தூர்வாருவதால் புண்ணியம் கிடைக்கும் என்று யாரோ சொல்லியிருப்பார் கள். அதனால் தான், கோவில் குளத்தில் சென்று, புண்ணியம் தேடுவதற்காக அந்த பணியை செய்திருப்பார் என்று தான் கருதுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

click me!