ஆர்எஸ்எஸ். கொள்கை என விமர்சித்த கி.வீரமணி. திராவிடத்தின் கொள்கை என பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

By manimegalai aFirst Published Oct 27, 2021, 5:19 PM IST
Highlights

திராவிடம் என்னவென்று தெரியாமல் ஒரு சில கோமாளிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கல்வி புரட்சியை கொண்டு வந்தது தான் திராவிட இயக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிடம் என்னவென்று தெரியாமல் ஒரு சில கோமாளிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கல்வி புரட்சியை கொண்டு வந்தது தான் திராவிட இயக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடரால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. இதனை சரி செய்திடவும், கிராமப்புறங்களில் கற்றல் இடைவெளியை போக்கிடவும் தமிழ்நாடு அரசின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இது குலக்கல்வியை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, இதைக் கூட அறியாமல் தமிழ்நாடு அரசு இதனை செயல்படுத்த துடிக்கிறது என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கடுமையாக சாடியிருந்தார்.

இந்தநிலையில், முதற்கட்டமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டுவந்ததற்காக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பாராட்டினார். அவரது தந்தை பொய்யாமொழி இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவாரோ அதே மகிழ்ச்சி தமக்கு ஏற்பட்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், திராவிடம் என்றால் என்னவென்று புரியாத சில கோமாளிகள், திராவிடம் என்றால் என்ன என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. கல்வி புரட்சியை கொண்டுவந்தது தான் திராவிட இயக்கம். திண்ணைக் கல்வியை கொண்டுவந்தது திராவிட இயக்கம். ஒரு சமூகத்தினர் மட்டுமே படிக்கலாம் என்ற நிலையை மாற்றியது திராவிடம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது திமுக அரசை விமர்சித்த வீரமணிக்கு பதிலடியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது தான் சத்துணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் காமராஜர், எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோரால் சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. சத்துணவு திட்டத்தை போலவே இல்லம் தேடி கல்வி திட்டமும் சரித்திரம் படைக்கும். இல்லம் தேடி கல்வி திட்டம், ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!