வேளாண் துறைக்கு ரூ.11,982 கோடி ஒதுக்கீடு... அடுத்தடுத்து அடித்து தூக்கும் அதிமுக அரசு...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 23, 2021, 12:22 PM IST
Highlights


பயிர்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக 2021 - 2022ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.1, 738.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தி வரும் மாநில அரசு அவர்களுக்கு ஏற்கனவே பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. தற்போது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் 50 சதவீதமாக இருக்கும் விவசாய மக்களுக்கு அதிமுக அரசு முன்னுரிமை அளித்து வருவதை சுட்டிக்காட்டினார். 

8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூன் 12ம் தேதி அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது 4.12 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் பயிரிடப்பட்டது. உரிய நேரத்தில் விதைகள், இடுபொருட்கள் கிடைத்த போதும், நிவர், புரவி புயலாலும், பருவம் தவறிய பெருமழையால் பயிர்கள் சேதமடைந்தன. பயிர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் மானாவரி பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.7,410-யில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும், நெல் மற்றும் இதர பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.13,500-யில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும், பல்லாண்டு கால பயிருக்கு 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 

விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் விதமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு  செலுத்த வேண்டிய அனைத்து பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில், சுமார் ரூ. 12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

பயிர்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக 2021 - 2022ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக ரூ.1, 738.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வேளாண் துறைக்கு 11 ஆயிரத்து 982 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு 11 ஆயிரத்து 894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!