விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு..!

By vinoth kumarFirst Published Feb 23, 2021, 11:58 AM IST
Highlights

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபட்டார். நிதி அமைச்சராக, 11வது முறையாக, இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் பன்னீர்செல்வம் பேசுகையில்;- இந்த அரசு, மே மாதம் ஆட்சி காலத்தை நிறைவு செய்ய உள்ளது. ஆளுமைத் திறன் குறியீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பு, மீட்பு பணிகளுக்காக ரூ.13,352.85 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கூட முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு பணியாற்றியது. தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் சுகாதாரம், காவல், வருவாய், ஊரக வளர்ச்சித்துறையினர் அயராது உழைத்தனர். இதனால், கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

* தமிழகத்தின் கடன் ரூ.5,70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசின் திட்டம் உலக வங்கியின் பரிசீலனையில் உள்ளது. 2021 22ல் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.688.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  பயிர்க்கடன் தள்ளுபடிக்காக இடைக்கால வரவு செலவு திட்டம் மதிப்பீட்டில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 16,43,347 விவசாயிகளின் ரூ.12,110,74 கோடியை தமிழக அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. 

*  அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும். 

*  கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுக்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

*  அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். 12,000 பேருந்துகளில் 2000 பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும் என அறிவித்துள்ளார். முதல்கட்டத்தில் 2,200 பிஎஸ் 6 பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். 

click me!