மதிப்பெண் பட்டியலில் ஆங்கிலம்.. இது தான் உங்கள் தமிழை வளர்க்கும் இலட்சணம்.. வெட்கக்கேடு.. சீமான் ஆவேசம்..

By Thanalakshmi VFirst Published Jun 22, 2022, 3:43 PM IST
Highlights

10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவுசெய்திருப்பதும் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 

கடந்த 20 ஆம் தேதி மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அன்று காலை 10 மணிக்கு 12 ஆம் தேர்வு முடிவுகளும், மதியம் 12 மணிக்கு  10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகின. இந்தாண்டி 12 ஆம் வகுப்பு 93.76 % தேர்ச்சியும் 10 ஆம் வகுப்பில் 90.07% தேர்ச்சியும் மாணவர்கள் பெற்றுள்ளனர். 

மேலும் 10 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் 12 ஆம் வகுப்பில் மொத்தம் 8. 06 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7. 55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.  இரண்டு தேர்வு முடிவுகளிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 12 ஆம் வகுப்பு தேர்வில் 97.95 % தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

10 ஆம் வகுப்பில் கன்னியாகுமரி மாவட்டம் 97.22 % தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது. இரண்டு தேர்வு முடிவுகளிலும் மிக குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டமாக வேலூர் மாவட்டம் உள்ளது.  மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை மாணவர்கள்,  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம். மேலும் பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவுசெய்திருப்பதும் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவுசெய்திருப்பதும் கண்டனத்திற்குரியது. எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்’ எனும் முழக்கத்தை முன்வைத்து ஆட்சியதிகாரத்துக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள், தமிழை வளர்க்கும் இலட்சணம் இதுதான்! தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சி! வெட்கக்கேடு என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!