பட்டியலின மக்களுக்கான நிதியை செலவு செய்த தமிழக அரசு; களத்தில் இறங்கி பிச்சை எடுக்க தொடங்கிய பாஜக

By Velmurugan s  |  First Published Sep 7, 2023, 12:45 PM IST

பட்டியல் பிரிவு மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியதாக கூறி திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜகவினர் திமுகவுக்கு பிச்சை அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக திருப்பூர் தெற்கு மாவட்டம், பட்டியல் அணி சார்பில் பட்டியல் இன மாவட்ட தலைவர் நத்தக்காடையூர் சாமிநாதன் தலைமையில் தாராபுரம் அண்ணா சிலை அருகே ஆர்பாட்டம் நடைபெற இருந்தது.

இதில் மத்திய  அரசு பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கும் நிதியை தமிழக அரசு அதனை திருப்பி அனுப்புவதோடு பட்டியல் பிரிவு மக்களுக்கு ஒதுக்காமல் வேறு துறைக்கு மாற்றுவதாக புகார் கூறி பாஜக பட்டியல் அணியினர் உண்டியல் குலுக்கி பிச்சை எடுத்து தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பி வைக்க போவதாக கோரி பேனருடன் உண்டியலை எடுத்துக்கொண்டு வந்தனர். 

Tap to resize

Latest Videos

பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பிய மாணவி விபத்தில் பலி

அப்போது தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட காவல் துயைினர் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக கூறி அவர்கள் கொண்டு வந்த பேனர்களை பிடுங்கி தர தர வென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றார். இதில் பாஜகவினருக்கும்  காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தாராபுரம் அண்ணா சிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க இல்லாத உலகத்துல நான் மட்டும் எப்படிப்பா.... தந்தை இறந்த சோகத்தில் மகனும் உயிரிழப்பு

click me!