அதிமுகவுக்கு தில் இருந்தால் நேரடியாக தேர்தலை சந்தியுங்கள்...!! எக்கச்சக்கமாக போட்டுத்தள்ளிய பாஜக..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 20, 2019, 6:16 PM IST
Highlights

இந்த ஜனநாயக சீர்கேட்டை ஆளுங்கட்சி தற்போது செய்ய துணிந்துள்ளது.  அதிமுகவுக்கு நேரடி தேர்தலை எதிர்கொள்வதற்கு துணிவிருந்தாள்,  ஏற்கனவே உள்ள முறையில் அதாவது நேரடி தேர்தல் முறையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என கடுமையாக  விமர்சித்துள்ளார்.
 

கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் தராமல் தவிர்க்கவே மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த  அதிமுக முயற்சி செய்கிறது என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.   நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக  நடைபெற்றுவருகிறது.  வரும் டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது நிலையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக, அதிமுக தயாராகி வருகின்றன. 

 உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான அதிமுக அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளது.  அதேநேரத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் தற்போது இறங்கியுள்ளனர்.  அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தற்போது தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை கேட்டு அதிமுகவை நெருக்கிவருகின்றன. இது அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருவதாக தகவல்  வெளியாகியுள்ளன.  குறிப்பாக சென்னை மேயர் பதவியை குறிவைத்து பாஜக,  பாமக அதிமுகவை நிர்பந்தித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.  அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மேயர்,  நகராட்சி, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்  பதவிகளுக்கு தற்போது நேரடி தேர்தல் நடைமுறையே இருந்து வருகின்றன. 

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த.  பாஜக மாநிலப் பொருளாளர் எஸ். ஆர் சேகர்,  மேயர் பதவிக்கு  நேரடியாக தேர்தல் நடத்தி அதன் மூலம் தேர்வு செய்யப்படுவதை தவிர்க்க , மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்ய  ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது.  கூட்டணிக் கட்சிகள் பதவிகள் கேட்பதை தவிர்க்கவே அதிமுக இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த ஜனநாயக சீர்கேட்டை ஆளுங்கட்சி தற்போது செய்ய துணிந்துள்ளது.  அதிமுகவுக்கு நேரடி தேர்தலை எதிர்கொள்வதற்கு துணிவிருந்தாள்,  ஏற்கனவே உள்ள முறையில் அதாவது நேரடி தேர்தல் முறையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என கடுமையாக  விமர்சித்துள்ளார்.


 

click me!